Header Logo

செய்திகள்
களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

Jun 23, 2026 - 10:35 AM -

0

களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றவியல் விசாரணை பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் தொடர்பாக விசேட குற்றவியல் விசாரணை பிரிவினர் விசாரணையொன்றை மேற்கொண்டு வந்துள்ளனர். 

அந்த விசாரணைக்கு அமைவாக, நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக அவர் 10 இலட்சம் ரூபாய் பணத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர், முறையீட்டாளரிடமிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

இந்த நிலையில், எஞ்சிய 9 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக களுத்துறையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வந்திருந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!