Header Logo

செய்திகள்
வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு

Jun 23, 2026 - 02:44 PM -

0

வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு

குருநாகல், வெல்லவ பகுதியில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (23) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 46 வயதுடைய பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கடந்த காலத்தில் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரொருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த பெண் இதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த போது, அந்த நபருடன் வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியதும் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரது சட்டப்பூர்வ கணவருடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சட்டப்பூர்வ கணவரின் வீட்டில் இருந்தபோதே, அவருடன் முன்னர் தொடர்பில் இருந்த நபரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேக நபர் வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!