Header Logo
SLIC
பல்சுவை
தலை அரிப்பு தாங்க முடியலையா?

Jun 24, 2026 - 06:29 PM

தலை அரிப்பு தாங்க முடியலையா?
Mobitel Inner 1278
EDEX Inner

லெமனும் தயிரும், 

நம்ம வீட்ல எப்பவும் தயிர் இருக்கும்ல? ஒரு சின்ன கப்புல புளிச்ச தயிர் எடுத்துக்கோங்க. அதுல அரை மூடி எலுமிச்சம்பழ சாறை பிழிஞ்சு நல்லா கலந்துக்கோங்க. 

இதை அப்படியே தலையோட வேர்க்கால்களில் படுவது போன்று நல்லா தேய்ச்சு விடுங்க. ஒரு 20 நிமிஷம் அப்படியே ஊற விட்டுட்டு, அப்புறமா மைல்டான ஷாம்பு போட்டு குளிச்சிருங்க. தயிர் தலையை சாஃப்ட் ஆக்கும், லெமன் பொடுகை காலி பண்ணும்! 

வேப்பிலை அண்ட் எலுமிச்சை, 

தலை பயங்கரமா அரிக்குது, சின்ன சின்னதா கொப்பளம் வருதுன்னா இதுதான் பெஸ்ட் சாய்ஸ். ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து நல்லா அரைச்சுக்கோங்க. 

அதுல கொஞ்சம் லெமன் ஜூஸ் ஊத்தி மிக்ஸ் பண்ணி தலையில பேக் மாதிரி போடுங்க. ஒரு 15 நிமிஷம் கழிச்சு வாஷ் பண்ணிடுங்க. 

வேப்பிலையில இருக்கிற ஆன்டி-பாக்டீரிபா குணம் பொடுகை வரவழைக்கிற ஃபங்கஸை அப்படியே அழிச்சிரும். 

சின்ன வெங்காய சாறு, 

பொடுகு வந்தாலே கூடவே முடி கொட்டுற பிரச்சினையும் ஃப்ரீயா வந்துரும். அதுக்கு சூப்பர் ஐடியா - சின்ன வெங்காயம். 

ஒரு 10 சின்ன வெங்காயத்தை எடுத்து நல்லா அரைச்சு சாறு மட்டும் பிழிஞ்சு எடுத்துக்கோங்க. 

ஒரு பஞ்சு வச்சு அந்த சாறை தலையில் நல்லா தேய்ங்க. ஒரு 15 நிமிஷத்துல குளிச்சிருங்க. 

வெங்காயத்துல இருக்கிற சல்பர் பொடுகை நீக்குறது மட்டும் இல்லாம, புது முடியையும் வளர வைக்கும். 

போனஸ் டிப்ஸ், 

சீப்பை மாத்துங்க: உங்க சீப்பை மத்தவங்களுக்கு தராதீங்க. வாரம் ஒருக்கா உங்க சீப்பை சுடுதண்ணியில் போட்டு நல்லா கழுவுங்க. 

ஈரத்தலை வேண்டாம்: குளிச்சதுக்கு அப்புறம் தலையை ஒழுங்கா காய வைக்காம அப்படியே பின்ன வேண்டாம். ஈரம் இருந்தா பொடுகு இன்னும் அதிகமாகும். 

தலையணை உறை: வாரம் ரெண்டு தடவையாவது உங்க பில்லோ கவரை மாத்திருங்க. ஏன்னா அதுல இருக்குற பொடுகு கிருமிகள் திரும்ப உங்க தலையிலயே ஒட்டிக்கும். முகத்துக்கும் இது பாதிப்புதான். 

தேங்காய் எண்ணெய் + கற்பூரம்: சாதாரணமா தலைக்கு எண்ணெய் வைக்கும் போது, தேங்காய் எண்ணெயை லேசா சூடு பண்ணி அதுல ஒரே ஒரு சிட்டிகை கற்பூரத்தை நசுக்கிப் போட்டு தலையில தேய்ச்சிட்டு வந்தா பொடுகு வராது.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278