Header Logo

வணிகம்
SLIIT இறுதியாண்டு புத்தாக்குனர்கள் சர்வதேச செயற்கை நுண்ணறிவுப் (AI) போட்டியின் வெற்றியை தமதாக்கியுள்ளனர்

Jul 2, 2026 - 04:55 PM -

0

SLIIT இறுதியாண்டு புத்தாக்குனர்கள் சர்வதேச செயற்கை நுண்ணறிவுப் (AI) போட்டியின் வெற்றியை தமதாக்கியுள்ளனர்

SLIIT ன் கணினி கற்கைபீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களைக் கொண்ட Team Akura என்ற அணி, OneEarth ன் 2026 AI Tool Building Challenge என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியை உருவாக்கும் போட்டியில் வெற்றிவாகை சூடியுள்ளது. இலண்டன் Goldsmith’s University பல்கலைக்கழகத்தின் School of Computing கற்கைபீடத்தால் நிகழ்நிலையாக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யதார்த்த உலகில் காணப்படும் சவால்களுக்கு தீர்த்து வைப்பதில் செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கு இப்போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தமது நான்காவது ஆண்டு மாணவர்களின் செயற்திட்டம் இதனுடன் மிகவும் ஒத்திசைவதை அவதானித்த அவர்களுடைய வழிகாட்டல் ஆசான் கலாநிதி தினுக விஜேந்திர அவர்கள் அணிக்கு வழிகாட்டியதுடன், இப்போட்டிக்கான அவர்களுடைய விண்ணப்ப நடைமுறையையும் மேற்பார்வை செய்துள்ளார். 

மிஹிரான் நாணயக்கார, தினிதி பியதிலக, துவிந்து ரத்நாயக்க மற்றும் ராகுல் நாணயக்கார ஆகியோர் அடங்கிய அணி, 3-6 வயது கொண்ட சிறுவர்கள் சிங்கள மொழியைக் கற்பதற்கு உதவுவதற்காக மொபைல் அடிப்படையிலான, பல்வேறு கற்றல் முறைகளை ஒருங்கிணைக்கும் தளமொன்றை வடிவமைத்துள்ளனர். இளம் சிறுவர்கள் மத்தியில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு தொடர்பில் உலகில் வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்ற போதிலும், Team Akura மேற்கொண்ட அணுகுமுறை இத்தகைய தொழில்நுட்ப சாதனங்களின் பாவனையை அவர்கள் மத்தியில் மிகவும் பயன்மிக்க வழியில் மாற்றியமைத்துள்ளது. 

பெரும்பாலான டிஜிட்டல் கற்றல் துணைச் சாதனங்கள் மற்றும் கருவிகள் மனப்பாடம் செய்வதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அறிவை உள்வாங்கும் ஆற்றலை வளர்ப்பதைத் தவறவிட்டுவிடுவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் காண்பிப்பதற்காக Team Akura குறிப்பிட்டுள்ளது. அதற்குப் பதிலளிக்கும் வகையில், தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட, நிகழ்நேர கல்வித்துணை வழங்குவதற்காக கையெழுத்துப் பயிற்சி, உச்சரிப்பு மதிப்பீடு, சைகை அடிப்படையில் எண்களைக் கையாளும் திறன் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு கற்கும் முறை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் தகவமைப்புத்திறன் கொண்ட கருவியொன்றை அவர்கள் வடிவமைத்துள்ளனர். 

செயற்கை நுண்ணறிவின் துணையுடன் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தரமான கல்வி என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற போட்டியில் அனுபவம் வாய்ந்த சர்வதேச வல்லுனர்களைக் கொண்ட நடுவர் அணியின் முன்னிலையில் தமது படைப்பின் சிறப்பினை எடுத்துக்காட்டுவதற்காக இரு சுற்று படைப்பாக்க விளக்கமளிப்பு நிகழ்வுகளுக்கு அவர்கள் முகங்கொடுத்தனர். அவர்களுடைய தைரியத்திற்குச் சவால் விடும் வகையில், கிளவுட் கணினி கட்டமைப்புக்கள், இணையப் பாதுகாப்பு, ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு, மற்றும் தரவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் வல்லுனர்களாகவுள்ள நடுவர்களுக்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. முதற்சுற்றில் தமது படைப்பாக்கத்தை மேற்கொண்ட பின்னர் தைரியம் சற்று மேம்பட்டதாக இவ்வணி குறிப்பிட்டது. தமது சிந்தனைகள் உலகெங்கிலுமிருந்து பங்குபற்றிய தொழிற்துறை வல்லுனர்களின் எதிர்பார்ப்புக்களை எதிரொலிக்கச் செய்துள்ளதைக் கண்டமை மிகவும் உத்வேகமளிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவமாக மாறியதெனவும் குறிப்பிட்டது. 

Team Akura அணி வென்றுள்ளதாக இவ்வாண்டின் முற்பகுதியில் அறிவிக்கப்பட்ட சமயத்தில் அணியின் பெரும்பாலான அங்கத்தவர்கள் SLIIT ல் தமது இறுதியாண்டுப் பரீட்சைக்காக தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இவ்வெற்றி அவர்கள் தமது பட்டங்களை மிகவும் சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கு ஊக்கமளித்துள்ளது மாத்திரமன்றி, முன்னணி தொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து சில நடுவர்களின் மதிப்புமிக்க வழிகாட்டல் ஆலோசனைகளும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!