Header Logo
SLIC
வணிகம்
SDB வங்கி, நிலையான வைப்புக்களுக்கான கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன் Power Deposits பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது

Jul 3, 2026 - 12:47 PM

SDB வங்கி, நிலையான வைப்புக்களுக்கான கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன் Power Deposits பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தனது நிலையான வைப்புப் பிரச்சாரத்தைத் தொடங்குவதை SDB வங்கி, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இது, தேர்ந்தெடுக்கப்பட்ட குறுகிய மற்றும் நடுத்தர தவணைக் காலங்களுக்கு, ஆண்டுக்கு 11.25% வரையான வட்டி வீதத்தை வழங்கி, ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மிகச் சிறந்த வட்டி வீதங்களில் ஒன்றை வழங்குகிறது. அதிகரித்து வரும் சந்தை வட்டி வீதங்கள் மற்றும் அதிகரித்து வரும் போட்டிக்கு மத்தியில், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதையும், வைப்புத்தொகை திரட்டலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய முயற்சியே இந்தப் பிரச்சாரம் ஆகும். 

இந்த நிலையான வைப்பு பிரச்சாரமானது, SDB வங்கியின் போட்டி ஸ்தானத்தை வலுப்படுத்தவும், தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வைப்புக்களுக்கு சிறந்த வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கவும் வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையான வைப்புக்களின் தவணைக் காலங்கள் 120 முதல் 390 நாட்கள் வரை உள்ளன. சம்பளம் பெறும் தொழில் புரிகின்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் நிலையான முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் வணிக உரிமையாளர்கள் உள்ளிட்ட, கிடைக்கும் வட்டி வீதத்தில் கரிசனைமிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பிரச்சாரம் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்குகிறது. 

மாறிவரும் சந்தை சூழலில் வாடிக்கையாளர்களுக்கு அதிக வருமானம் தரும் நிதித் தீர்வுகளை வழங்குவதிலும், அதன் மூலம் அவர்கள் கூடுதல் பலன்களைப் பெற வாய்ப்பளிப்பதிலும் SDB வங்கியின் அர்ப்பணிப்பை இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஊக்குவிப்புப் பிரச்சாரம் பிரதிபலிக்கிறது. 

இது குறித்து SDB வங்கியின் பிரதம வணிக அதிகாரி சித்ரால் டி சில்வா அவர்கள் கூறுகையில், “முன்னேற்றத்தை விரும்பும் தனிநபர்களுக்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்தும் ஒரு வங்கியாக, இந்தச் விசேட நிலையான வைப்பு வட்டி வீதத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரும் நிதித் தீர்வுகளை வழங்குவதில் எமது நோக்கத்துடன் இந்த முயற்சி சிறப்பாக ஒத்துப்போகிறது. ஒப்பீட்டளவில் சிறந்த இந்த வட்டி வீதங்களை வழங்குவதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பினை அளிக்கவும், அவர்களின் நிதிப் பயணத்தில் ஒரு நம்பிக்கையான கூட்டாளராக எங்கள் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். 

SDB வங்கியின் இந்த நிலையான வைப்பு ஊக்குவிப்புப் பிரச்சாரமானது, வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புக்களுக்கு சிறந்த வட்டி வீதத்தை உறுதி செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தச் விசேட சலுகை குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, வாடிக்கையாளர்கள் SDB வங்கியின் ஏதேனும் ஒரு கிளைக்கு நேரில் செல்லலாம், வங்கியின் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தலாம் அல்லது 0115 411 411 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். 

SDB வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நடைமுறைக்கு ஏற்ற மற்றும் எளிதில் அணுகக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அத்துடன், தங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் நம்பகமான மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையை வழங்கி வருகிறது. 

SDB வங்கி தொடர்பான விபரங்கள்: 

ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட, வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ள வங்கியான SDB வங்கி, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தலுடன், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகத் திகழ்வதுடன், BB +(lka) என்ற Fitch Rating கடன் தர மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நாடளாவியரீதியிலுள்ள 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, நாடெங்கிலுமுள்ள தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வர்த்தக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. சூழல், சமூகம், மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance - ESG) கோட்பாடுகள் SDB வங்கியின் பண்பாடுகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவதில் மிகவுறுதியான கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச்செல்லும் நோக்குடன், குறிப்பாக பெண்களுக்கு வலுவூட்டல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க அபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து வாய்ப்பளித்தல் ஆகியவற்றில் இவ்வங்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278