Header Logo
Mogo Academy

இந்தியா
தமிழக துணை முதல்வராகும் திருமாவளவன்?

Jul 5, 2026 - 01:04 PM -

0

தமிழக துணை முதல்வராகும் திருமாவளவன்?
Mobitel inner

தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி அமைத்து முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். 

இந்த ஆட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மேலும் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகித்து வருகிறது. 

இந்த சூழலில் திருமாவளவன், இடைத்தேர்தலில் போட்டியிடு வார் என தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இதற்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று கூறி அவர் முற்றுப்புள்ளி வைத்தார். 

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் 17 ஆம் திகதி தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஓமலூர் மாவட்ட செயலாளர் சாமுராய்குரு தலைமை தாங்கினார். 

இந்த கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதுடன் வெற்றி பெற்று எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் தலைவரை துணை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் காஜாமைதீன், மண்டல துணை செயலாளர்கள் அங்கப்பன், தெய்வானை உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara