Header Logo

செய்திகள்
ஆரோக்கியமான சமூகத்தை எவ்வாறு உருவாக்குவது?

Jul 5, 2026 - 05:18 PM -

0

ஆரோக்கியமான சமூகத்தை எவ்வாறு உருவாக்குவது?

ஊட்டச்சத்தை மையமாகக் கொண்ட சுகாதாரக் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்திற்கான அடித்தளம் அமைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை அளிக்கும் எல்லைக்கு அப்பால் சென்று, நோய்த்தடுப்பு, ஆரோக்கிய மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, இலக்குகளைக் கொண்ட ஊட்டச்சத்தை மையமாகக் கொண்ட தேசியக் கொள்கை ஒன்று அவசியமானது என அவர் கூறுகிறார்.


இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கம் மற்றும் இலங்கை ஊட்டச்சத்து மருத்துவக் கல்லூரி ஆகியவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.


“மருத்துவப் பராமரிப்பில் ஊட்டச்சத்தை ஒருங்கிணைத்தல்: தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த அமர்வு, மருத்துவ ஊட்டச்சத்து, பொது சுகாதாரக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான மற்றும் அறிவார்ந்த கல்விசார் தளமாகும்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள், ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் மற்றும் சுகாதாரத் துறையின் முன்னணி அறிஞர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மாநாடு, இலங்கையின் மருத்துவ ஊட்டச்சத்து சேவைகளின் தரத்தை உயர்த்துவது, நவீன அறிவியல் அறிவை மேம்படுத்துவது மற்றும் கொள்கை அளவிலான முடிவுகளுக்குப் பங்களிப்பு செய்வதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.


இது இலங்கையின் ஊட்டச்சத்து மருத்துவத் துறையின் அறிவியல் வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.


இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஊட்டச்சத்து என்பது சுகாதார சேவையின் ஒரு துணை அங்கம் அல்ல என்றும், அது நோய் தடுப்பு, சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு வரை பரந்து விரிந்துள்ள சுகாதார அமைப்பின் அடிப்படை அங்கம் என்றும் கூறினார்.


எனவே, சுகாதாரக் கொள்கைகளை உருவாக்குவது முதல் வைத்தியசாலை சேவைகளைத் திட்டமிடுவது வரை அனைத்து நிலைகளிலும் ஊட்டச்சத்தை ஒரு முன்னுரிமையாக நிறுவுவது இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.


மருத்துவ ஊட்டச்சத்து பொது சுகாதாரக் கொள்கையுடன் நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், மக்களின் உணவுத் தேர்வுகள், உணவு லேபிளிடுதல், சந்தை அணுகல் மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவை மக்களின் ஆரோக்கிய நிலையைத் தீர்மானிக்கும் காரணிகள் என்றும் கூறினார்.


அதன்படி, உணவுச் சட்டத்தின் கீழ் திரவ உணவுப் பொருட்களில் உள்ள சர்க்கரையின் அளவுக்கான வண்ணக் குறியீட்டு லேபிளிடும் முறை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் நுகர்வோர் வாங்கும் போதே தெளிவான மற்றும் துல்லியமான தகவல்களின் அடிப்படையில் ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


அத்துடன், இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கம் மற்றும் இலங்கை ஊட்டச்சத்து மருத்துவக் கல்லூரி ஆகியவை நாட்டின் மருத்துவ ஊட்டச்சத்து துறையை வலுப்படுத்துவதற்காக ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி, சான்றுகள் சார்ந்த மருத்துவ நடைமுறைகள் மற்றும் பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் வழங்கும் பங்களிப்பை அமைச்சர் சிறப்பாகப் பாராட்டினார்.


இத்தகைய கல்விசார் மன்றங்கள் கொள்கை வகுப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், இது மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு நேரடியாகப் பங்களிக்கும் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!