Jul 5, 2026 - 06:35 PM -
0
பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளை மேலும் இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்று (05) பிற்பகல் 4.30 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 06 மாத காலத்திற்கு அந்த நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு இணங்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனத்திற்கு எதிராக இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டு வரும் விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

