Jul 5, 2026 - 10:04 PM -
0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆண் கைதிகள் குழுவொன்று அங்குள்ள கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது.
அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், இன்று மாலை அந்தச் சிறைச்சாலையின் கூரை இடிந்து விழுந்துள்ளது.
இதில் காயமடைந்த நான்கு கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

