Header Logo
SLIC
வணிகம்
தாய்மார்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்காக காலி ஜேர்மன் இலங்கை நட்புறவு வைத்தியசாலையுடன் கைகோர்க்கும் பேபி செரமி

Jul 6, 2026 - 12:03 PM

தாய்மார்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்காக காலி ஜேர்மன் இலங்கை நட்புறவு வைத்தியசாலையுடன் கைகோர்க்கும் பேபி செரமி
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் மிகவும் நம்பிக்கையான குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, தாய்மார்களுக்கு முழுமையான குழந்தை பராமரிப்பு ஆதரவை வழங்கும் தனது நோக்கத்தின் ஒரு அங்கமாக, காலி ஜேர்மன் இலங்கை நட்புறவு வைத்தியசாலையுடன் (German Sri Lanka Friendship Hospital) இணைந்து ஒரு விசேட திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தென்னிலங்கையின் முன்னணி சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, பெருமளவிலான கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் பராமரிப்பு சேவைகளை வழங்கி வரும் இந்த வைத்தியசாலைக்கு வருகை தரும் பெற்றோரின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம், பேபி செரமி நிறுவனம் வைத்தியசாலை முழுவதும் புதிதாக வழிகாட்டல் மற்றும் பெயர்ப் பலகைகளை (signages) நிறுவியுள்ளது. இது வருகையாளர்கள் வைத்தியசாலையை எளிதாகக் கண்டறிந்து பயணிப்பதற்கும், அத்தியாவசியமான தாய் மற்றும் சேய் பராமரிப்புத் தகவல்களை பெறுவதற்கும் உதவுகிறது. மூன்று தேசிய மொழிகளிலும் அமைந்துள்ள இந்த பெயர்ப் பலகைகள், கர்ப்பகாலம், பிரசவம், ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு குறித்த வழிகாட்டல்களை வழங்குவதுடன், பெற்றோர்கள் தங்களது பயணத்தில் சரியான முடிவுகளை எடுக்க அவர்களை வலுவூட்டுகின்றன. தனது விரிவுபடுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) உள்ள புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான டயபர்களை நன்கொடையாக வழங்கி ஆதரவளிப்பதற்காக ஒரு வருட கால கூட்டாண்மையை பேபி செரமி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. 

இதன் முதற்கட்டமாக, 2026 ஜனவரி 30 ஆம் திகதி, மூன்று மாதங்களுக்குத் தேவையான டயபர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் K.M.M. சோமரத்ன, குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவின் (NICU) தாதி அதிகாரி S.W.A.F. சேனானி, விசேட தர தாதி அதிகாரி T.K.P.P. டயஸ், மருத்துவ அதிகாரி வைத்தியர் M.A.T.I. விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் கையளிக்கப்பட்டன. மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் ஆறுதலளிக்கும் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பேபி செரமி புதிதாக பிறந்த குழந்தை டயபர்கள், குறைப்பிரசவத்தில் பிறக்கும் (preterm) குழந்தைகளின் மிருதுவான தேவைகளுக்கும் மிகவும் பொருத்தமானவையாகும். இது குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் சுகவாழ்வு தொடர்பில், இவ்வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பை, குறிப்பாக தீவிர சிகிச்சை சூழல்களில் அவர்களின் வாழ்வின் முதல் நாளிலிருந்தே உறுதிப்படுத்துகிறது. 

இந்த திட்டம் குறித்து Hemas Consumer Brands நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர கருத்துத் தெரிவிக்கையில், “NICU டயபர் ஆதரவு உள்ளிட்ட இந்தத் திட்டமானது, இலங்கைத் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த அணுகலுக்கான வசதி, அது பற்றிய கல்வி, முழுமையான குழந்தை பராமரிப்புக்கான தீர்வுகள் மூலம் பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கான பேபி செரமியின் நீண்டகால நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த வர்த்தகநாமம் புதிய தாய்மார்களுக்கு நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சிறந்த குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு முறைகளை ஊக்குவிக்கும் கல்வி சார்ந்த முன்முயற்சிகள் மூலம் ஆதரவளித்து வருகிறது,” என்றார். 

இந்த ஒத்துழைப்பு குறித்து, ஜேர்மன் இலங்கை நட்புறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சோமரத்ன கோணார தெரிவிக்கையில்: “புதிதாக பிறந்த குழந்தைக்கான எமது தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு புதிதாக பிறந்த குழந்தை டயபர்களை தாராளமாக நன்கொடை வழங்கிய இந்தத் திட்டமானது, கர்ப்பிணி பெற்றோர்கள் மற்றும் வருகையாளர்களின் வைத்தியசாலை அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.” என்றார். தெளிவான மற்றும் உரிய தகவல்களை கொண்ட பெயர்ப் பலகைகளானவை நடைமுறை ரீதியான வழிகாட்டலை வழங்குவதுடன், கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை கொண்ட விடயங்கள் புதிய தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பின் முக்கிய விடயங்களில் ஆதரவளிப்ப்தாகவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை மேம்படுத்துவதற்கான எமது பகிரப்பட்ட இலக்கை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் பேபி செரமியுடனான இந்த கூட்டாண்மையை நாம் மிகவும் மதிக்கிறோம். என்றார். 

காலியில் உள்ள ஜேர்மன் இலங்கை நட்புறவு வைத்தியசாலைக்கும் பேபி செரமிக்கும் இடையிலான இந்த சமீபத்திய ஒத்துழைப்பு உறவானது, பாதுகாப்பான தாய்மை, கல்வி அறிவுள்ள பெற்றோர் மற்றும் மேம்பட்ட ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு முறைகள் மூலம் இலங்கை தலைமுறைகளை வளர்ப்பதில் இந்த வர்த்தகநாமம் கொண்டுள்ள வரலாற்று ரீதியான அர்ப்பணிப்புக்கு மற்றுமொரு சான்றாகும். 640 இற்கும் மேற்பட்ட கட்டில்கள், விசேட தாய் மற்றும் புதிதாக பிறந்த குழந்தை பராமரிப்பு வசதிகள், ஆறு அறுவை சிகிச்சை பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவுகள், ஒரு ICU, குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (NICU) மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட குழந்தை மருத்துவ பிரிவுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன மகப்பேற்று வைத்தியசாலையுடன் கைகோர்ப்பது, மற்றும் அதற்கான வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் கிளினிக்குகள் மூலம் 800 இற்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு சேவை செய்யும் திறனைக் கொண்டிருப்பது, தாய் மற்றும் சேய் ஆரோக்கிய மேம்பாட்டு பெறுபேறுகளை உயர்த்துவதற்கான இந்த பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துகிறது. 

பேபி செரமி அர்த்தமுள்ள முன்முயற்சிகள் மூலம் பாதுகாப்பான ஆரம்பங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரித்து வருவதால், ‘எமது குழந்தைகளுக்காக பாதுகாப்பான உலகை உருவாக்குதல்’ எனும் தனது நோக்கத்தில் இவ்வர்த்தகநாமம் உறுதியாக உள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278