Header Logo
SLIC
வணிகம்
சிறுவர்களின் நலன் மீதான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், SLS தர அங்கீகாரத்தைக் கொண்ட தண்ணீர்ப் போத்தலை இலங்கையில் முதல்முறையாக அட்லஸ் அறிமு

Jul 6, 2026 - 12:10 PM

சிறுவர்களின் நலன் மீதான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், SLS தர அங்கீகாரத்தைக் கொண்ட தண்ணீர்ப் போத்தலை இலங்கையில் முதல்முறையாக அட்லஸ் அறிமு
Mobitel Inner 1278
EDEX Inner

பல தசாப்தங்களாகப் பெற்றோரின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள இலங்கையின் கல்வித்துறை சார்ந்த முன்னணி வர்த்தகநாமமான அட்லஸ், கற்றலை மகிழ்ச்சியாக மேற்கொள்ளும் வகையில் மாற்றியமைத்து, சிறுவர்களின் முழுத் திறனையும் வெளிக்கொண்டுவர உதவும் தயாரிப்புகள் மூலம் அவர்களின் கற்றல் மற்றும் விருத்திக்குத் துணைபுரிந்து வருகிறது. 

தலைமுறை தலைமுறையாக இலங்கையில் சிறுவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழ்ந்துவரும் அட்லஸ், அவர்கள் மத்தியில் படைப்பாற்றலைத் தூண்டும், தேடல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் மற்றும் கற்றலை ஒரு நேர்மறையான அனுபவமாக மாற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த பாரம்பரியச் சிறப்பின் அடிப்படையில், சிறுவர்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றான தண்ணீர்ப் போத்தலுக்கு, நம்பகமான மற்றும் தரச்சான்று பெற்ற தெரிவொன்றை வழங்குவதன் மூலம், கற்றல் சார்ந்த அர்ப்பணிப்பிற்கு அப்பாலும் தனது சேவையை விரிவுபடுத்தி, இலங்கையில் முதல்முறையாக SLS தரச்சான்று அளிக்கப்பட்ட தண்ணீர்ப் போத்தலை அட்லஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 

தயாரிப்பின் பாதுகாப்பு, தர உத்தரவாதம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது மிகுந்த கவனம் செலுத்தப்படும் இக்காலகட்டத்தில் இந்த அறிமுகம் இடம்பெறுகிறது. SLS தரச் சான்று அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, விரிவான பரிசோதனைகள் மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் பிளாஸ்திக் தண்ணீர்ப் போத்தல்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தரநிலைகளைத் துல்லியமாகப் பின்பற்றுதல் உள்ளிட்ட கடுமையான மதிப்பீட்டு செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அட்லஸ் தண்ணீர்ப் போத்தலானது பாதுகாப்பு, தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான அங்கீகரிக்கப்பட்ட தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்கிறது என்பதை இத்தரச்சான்று அங்கீகாரம் பெற்றோருக்கு உத்தரவாதமளிப்பதுடன், தனது அனைத்துத் தயாரிப்புகளிலும் உயர்மட்ட பாதுகாப்பு, தரம் மற்றும் நம்பகத்தன்மைத் தரநிலைகளைப் பேணுவதில் அட்லஸ் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது. 

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற உத்தியோகபூர்வ அறிமுக வைபவத்தில், ஒழுங்குமுறை அதிகாரத் தரப்புக்களின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை வல்லுநர்கள், தொழில்துறை நிபுணர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் அட்லஸ் நிறுவனத்தின் தலைமைத்துவ அணியினர் ஒன்றிணைந்து, தரச் சான்று அங்கீகாரம் பெற்ற தயாரிப்புக்கள், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்று நிலைகள் மற்றும் தாம் எதை வாங்குகின்றோம் என்பதன் தகவல் விபரங்களை நன்கறிந்த நுகர்வோர் தெரிவுகள் ஆகியவற்றிற்கு அதிகரித்து வரும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

Atlas Axillia நிறுவனத்தின் விற்பனை மற்றும் செயல்பாடுகளுக்கான பணிப்பாளர் இந்திரஜித் பிந்துஹேவ அவர்கள் இந்நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், “இது சிறுவர்களுக்கு உகந்ததா? என்ற ஒரு எளிய கேள்வியுடன் அட்லஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் ஆரம்பிக்கின்றன. தலைமுறை தலைமுறையாக இலங்கை குடும்பங்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில், பாதுகாப்பு தொடர்பில் ஒருபோதும் அசட்டையாக இருந்து விடக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கையில் தண்ணீர்ப் போத்தலுக்கு SLS தரச் சான்று அங்கீகாரத்தைப் பெறும் முதல் வர்த்தகநாமமாக மாறுவது, உயர்ந்த தராதரநிலைகளை நிலைநாட்டுவதில் எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், சிறுவர்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் மீது பெற்றோரின் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது. சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். 

மேலும், இந்நிகழ்ச்சியில் தொடர்புபட்ட முக்கிய தரப்பினரின் பிரதிநிதிகளுடன் ஒரு நிபுணர் குழு கலந்துகொண்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது. இது, தயாரிப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், சிறுவர்களையும் குடும்பங்களையும் பாதுகாப்பதிலும் தரநிலைகள், தரச்சான்று அங்கீகாரம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு ஆகியவற்றின் பங்கினை எடுத்துரைத்தது. 

Atlas Axillia நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பொது முகாமையாளர் கசுனி பண்டார அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “தலைமுறை தலைமுறையாக தங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழும் அட்லஸ் மீது பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அன்றாடம் அதிகம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றிற்கு, பாதுகாப்பான மற்றும் தரச்சான்று அங்கீகாரம் பெற்ற ஒரு தெரிவை வழங்குவதன் மூலம் அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதே இந்த அறிமுகத்தின் நோக்கமாகும். தரச்சான்று அங்கீகாரம் பெற்ற தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை இது ஊக்குவிப்பதோடு, பெற்றோர்கள் நம்பிக்கையுடனும் தெளிவுடனும் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். 

இலங்கையில் முதல்முறையாக SLS தரச்சான்று அங்கீகாரம் பெற்ற தண்ணீர்ப் போத்தலை அறிமுகப்படுத்துவதன் மூலம், உயர்ந்த தயாரிப்புத் தரங்களை அட்லஸ் நிறுவனம் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. அத்துடன், இலங்கை குடும்பங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தர உத்தரவாதம் அளிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிக்கும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு, சிறுவர்களின் நலனையே தனது அனைத்துச் செயல்பாடுகளிலும் மையமாகக் கொள்வதில் தனது அர்ப்பணிப்பையும் இது உறுதிப்படுத்துகிறது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278