Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
36 ஆவது ரோட்டராக்ட் மாவட்ட பேரவை!

Jul 6, 2026 - 12:23 PM

36 ஆவது ரோட்டராக்ட் மாவட்ட பேரவை!
Mobitel Inner 1278

இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் முழுவதிலுமிருந்து 1,000 இற்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள், கடந்த 27 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற 36 ஆவது ரோட்டராக்ட் மாவட்ட பேரவையில் ஒன்றுகூடி, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3220 (RID 3220) – இலங்கை மற்றும் மாலைத்தீவுகளின் ரோட்டராக்ட் தலைமைத்துவ மாற்ற விழாவை சிறப்பித்தனர். 

ஒவ்வொரு ரோட்டரி சர்வதேச ஆண்டின் முடிவிலும் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாவட்ட பேரவை, புதிய ரோட்டராக்ட் மாவட்ட வழிநடத்தல் குழுவை (District Steering Committee) பொறுப்பேற்கச் செய்வதோடு, பதவிவிலகும் குழுவின் சாதனைகளையும் கௌரவிக்கும் நிகழ்வாகும். ரோட்டரி சர்வதேசத்தின் "Create Lasting Impact" என்ற இவ்வாண்டின் கருப்பொருளை முன்னிறுத்தி, PHF Rtn. Rtr. டாக்டர் ஜூட் ஷனன் லூசியன் ( PHF Rtn. Rtr. PP Dr. Jude Shannon Lucian ) அவர்கள், 2026 – 27 ரோட்டரி ஆண்டிற்கான மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதியாக (District Rotaract Representative) முறையாக பதவியேற்றார். 

இந்நிகழ்வில், பதவிவிலகும் மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி Rtr. PP நஸ்மி மஹமூத் (Rtr. PP Nazmi Mahamood) மற்றும் அவரது மாவட்ட வழிநடத்தல் குழுவின் தலைமையில் நடைபெற்ற "Redefined Service" என்ற சிறப்புமிக்க சேவை ஆண்டும் கொண்டாடப்பட்டது. 

2025 – 26 ரோட்டரி ஆண்டில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் செயல்பட்டு வந்த 95 ரோட்டராக்ட் கழகங்களைச் சேர்ந்த 4,000 இற்கும் மேற்பட்ட செயற்பாட்டு ரோட்டராக்டர்கள், 2,400-க்கும் அதிகமான சமூக சேவைத் திட்டங்களை நிறைவேற்றி, 1,000,000-க்கும் மேற்பட்ட தன்னார்வ சேவை மணிநேரங்களை சமூக நலனுக்காக அர்ப்பணித்தனர். 

95 ரோட்டரராக்ட் கழகங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்த மாவட்ட பேரவையில், கடந்த ரோட்டரி ஆண்டில் ரோட்டராக்டர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையும் பாராட்டப்பட்டது. குறிப்பாக டிட்வா சூறாவளி (Cyclone Ditwah) புயலுக்குப் பின்னர் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டன. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க அனைத்து கழகங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டமை, "Service Above Self" என்ற ரோட்டரியின் உயரிய சேவைத் தத்துவத்தை உண்மையாக வெளிப்படுத்தியது. 

இந்த விழாவிற்கு சர்வதேச சிறப்பையும் சேர்த்த வகையில், தெற்காசிய ரோட்டரராக்ட் பலமாவட்ட தகவல் அமைப்பின் (Rotaract South Asia Multi-District Information Organization – RSAMDIO) தலைவர் PDRR Rtn. Rtr. PP அருண் தேஜா கோதாவர்த்தி (PDRR Rtn. Rtr. PP Arun Teja Godavarthi) (இந்தியா) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

RID 3220 மாவட்ட பேரவையில் பங்கேற்ற முதல் RSAMDIO தலைவராக அவர் வரலாறு படைத்தார். தெற்காசியாவின் எட்டு நாடுகளில் உள்ள 46 உறுப்பினர் மாவட்டங்களை உள்ளடக்கிய அமைப்பிற்கு தலைமை தாங்கும் அவர், இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கும் விருந்தோம்பலிற்கும் நன்றியைத் தெரிவித்தார். 

மேலும், 2025 – 26 ரோட்டரி ஆண்டில் RID 3220 ரோட்டராக்ட் உருவாக்கிய சிறப்பான தாக்கத்திற்காக பதவிவிலகும் தலைமைத்துவத்தினரை பாராட்டியதுடன், புதிய மாவட்ட வழிநடத்தல் குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

RID 3220 வரலாற்றில் நடைபெற்ற மாவட்ட பேரவைகளில் இதுவரை இல்லாத அளவிலான பெரும் திரளான பார்வையாளர்களை முன்னிலையில் வைத்து, John Keells Holdings PLC நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் குழும தலைமை தகவல் அதிகாரியான டாக்டர் ரமேஷ் சண்முகநாதன் ( Dr. Ramesh Shanmuganathan ) அவர்கள் பிரதான உரையை நிகழ்த்தினார். 

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வேகமாக மாற்றி வரும் உலகின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்த அவர், தொடர்ச்சியான கற்றலும் புதுமைகளையும் இளம் தலைவர்கள் தழுவிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 

செயற்கை நுண்ணறிவு சில பாரம்பரிய வேலைவாய்ப்புகளை மாற்றக்கூடும் என்றாலும், அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்போருக்கு புதிய வாய்ப்புகள் பெருமளவில் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

நிகழ்வின் நிறைவில் நடைபெற்ற தலைமைத்துவ மாற்ற நிகழ்வு, புதிய ரோட்டரி ஆண்டின் தொடக்கத்தை மட்டுமன்றி, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் முழுவதும் ஆயிரக்கணக்கான இளம் தன்னார்வலர்கள் சேவை, தலைமைத்துவம் மற்றும் நட்புறவின் மூலம் சமூகங்களில் மாற்றத்தை உருவாக்கும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய தருணமாகவும் அமைந்தது. 

புதிதாக பதவியேற்ற மாவட்ட வழிநடத்தல் குழுவின் தலைமையில், RID 3220 ரோட்டராக்ட், "Igniting Possibilities and Inspiring Change" என்ற தனது நோக்கத்துடன், ஒவ்வொரு சமூகத்திலும் "Create Lasting Impact" ஏற்படுத்தும் இலக்கை நோக்கி 2026–27 ரோட்டரி ஆண்டை உற்சாகமாக எதிர்நோக்குகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

Mobitel 1278