Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
நீர்கொழும்பு சிறைக் கோரம் :13 பேர் கவலைக்கிடம்!

Jul 6, 2026 - 02:42 PM

நீர்கொழும்பு சிறைக் கோரம் :13 பேர் கவலைக்கிடம்!
Mobitel Inner 1278

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கம்லத் தெரிவித்துள்ளார்.


இந்த மோதல் காரணமாக சுமார் 100 பேர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 13 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன்போது கைதிகள் சிறையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயற்சித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டனர். சிறைக்குள்ளிருந்து சில துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


காலை 10 மணி அளவில் ஏற்பட்ட இந்த பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் பெரும் சிரமப்பட்டனர். இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்தனர்.


இதற்கிடையில், சிறைச்சாலைக்குள் நிலவும் சூழலை அவதானிப்பதற்காக விமானப்படையின் ட்ரோன் (Drone) கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ட்ரோன் கருவிகளும், பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், அங்குள்ள பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்த மேலதிக இராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278