Header Logo
SLIC
வணிகம்
New Anthoney’s Feeds நிறுவனம் NCQP 2026-இல் நான்கு தங்கமும் ஒரு வெள்ளியும் வென்றது

Jul 6, 2026 - 02:53 PM

New Anthoney’s Feeds நிறுவனம் NCQP 2026-இல் நான்கு தங்கமும் ஒரு வெள்ளியும் வென்றது
Mobitel Inner 1278
EDEX Inner

பரிசுகளுடன் New Anthoney’s Feeds குழு தர மற்றும் உற்பத்தித்திறனுக்கான தேசிய மாநாடு (NCQP) 2026-இல், நியூ அன்டனிஸ் ஃபீட்ஸ்[New Anthoney’s Feeds] நான்கு தங்க விருதுகளையும் ஒரு வெள்ளி விருதையும் வென்று, தாம் சமர்ப்பித்திருந்த அனைத்து ஐந்து மேம்பாட்டு திட்டங்களுக்கும் அங்கீகாரம் பெற்றது. ஜூன் 17 அன்று கொழும்பு, மவுண்ட் லவினியா ஹோட்டலில் அறிவிக்கப்பட்ட இந்த முடிவுகள், NCQP 2025-இல் நிறுவனத்தின் இரட்டை தங்க வெற்றியைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக திகழ்வதுடன் மற்றும் இலங்கையின் மிகுந்த தரம்சார்ந்த விவசாய -உணவுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இலங்கையில் பணியிட மேம்பாடுகளை அங்கீகரிக்கும் முக்கியமான வருடாந்த தளமாக NCQP விளங்குகிறது. இலங்கை தரம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு சங்கம் (SLAAQP) ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாடானது, இவ்வாண்டு அதன் வரலாற்றிலேயே மிகப்பெரியதாக அமைந்து, 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து 2,000-க்கும் அதிகமான பிரதிநிதிகளை ஈர்த்ததுடன், தரக் கட்டுப்பாட்டு வட்டங்கள் , லீன் சிக்ஸ் சிக்மா, தர மேம்பாட்டு குழுக்கள் , பல்துறை செயல்பாட்டு குழுக்கள் மற்றும் கெய்சன் போன்ற பிரிவுகளில் 450 மேம்பாட்டு அணிகளை மதிப்பீடு செய்தது. இந்த மாநாடு “மீள்திறன் மிக்க இலங்கைக்கான மக்களால் செயற்படுத்தப்படும் தரமும் உற்பத்தித்திறனும்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. 

New Anthoney’s Feeds நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான செயல்திறனானது NCQP- இல் அது தொடர்ந்து உருவாக்கி வரும் சாதனைப் பதிவின் தொடர்ச்சியாகும். 2025 பதிப்பில் நிறுவனம் பன்முக செயல்பாட்டுக் குழுக்கள் மற்றும் தர மேம்பாட்டு திட்டங்கள் பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது; இந்த அங்கீகாரமானது தைவானில் நடைபெறும் தரக் கட்டுப்பாட்டு வட்டங்களின் சர்வதேச மாநாடு (ICQCC) 2025-இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியை அதற்கு வழங்கியது. இந்த ஆண்டு ஐந்து திட்டங்களில் நான்கு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பெற்ற நிலையில் அந்த தகுதியின் வலிமையால் நிறுவனம் மேலும் உயர்ந்த தரநிலைகளைஅடைந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது. 

“New Anthoney’s-இல், நாம் வெறுமனே கோழிகளை வளர்ப்பதுடன் மட்டுமல்லாது, தரநிலைகளையும் உயர்த்துகிறோம். இந்த பெறுபேறானதுஎமது செயல்பாடுகளின் பின்னால் இருக்கும் மக்களையும், ஒவ்வொரு நாளும் அவர்கள் கடைப்பிடித்து வாழும் தொடர் முன்னேற்றப்பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது,” என்று New Anthoney’s Group நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி நீல் சுரவீர தெரிவித்தார். 

New Anthoney’s Feeds Ltd. என்பது New Anthoney’s Group நிறுவனத்தின் தீவன உற்பத்தியாளராக திகழ்வதுடன் மற்றும் உற்பத்தியின் எந்த கட்டத்திலும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் கோழிகளை வளர்க்கும் நாட்டின் ஒரே நிறுவனமாகும். இந்த குழுமம் 1986 ஆம் ஆண்டு ஹங்வெல்ல பகுதியில் தலைவர் எமில் ஸ்டான்லி மற்றும் பணிப்பாளரான எஸ்.எம்.டீ மாரி சீதா லக்ஷ்மி ஆகியோரால் நிறுவப்பட்டது. இது 1,000 கோழிகளுடன் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது: இலங்கை குடும்பங்கள் சரியான முறையில் தயாரிக்கப்பட்ட உணவைப் பெற தகுதியுடையவையாகும் .நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, இது தீவன உருவாக்கத்திலிருந்து முட்டையிடும் நிலையம், பண்ணை, செயலாக்கம் மற்றும் சில்லறை விற்பனை வரை முழு விநியோக சங்கிலியையும் கட்டுப்படுத்துகிறது. இதன் தயாரிப்பு தொகுப்பில் ஹரித ஹரி நுண்ணுயிர்கொல்லி இல்லா வரிசை, சிக்கன் ஹவென்ஸ், க்ரிஸ்பிஸ் , Frenchys மற்றும் Meatlery சில்லறை வலையமைப்பு ஆகியவை அடங்கும். 

NCQP-இல் அங்கீகரிக்கப்பட்ட தரக் கலாசாரம், FSSC 22000, ISO 22000, ISO 9001:2015, HACCP மற்றும் GMP ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சான்றிதழ் முறைமையுடன் இணைந்து செயல்படுகிறது. New Anthoney’s நிறுவனம், ISO 14064-1:2018 கீழ் Control Union Netherlands மூலம் சான்றளிக்கப்பட்ட GHG Verification Statement வைத்திருக்கும் இலங்கையின் ஒரே கோழி உற்பத்தி நிறுவனமாகவும் உள்ளது. 2026 ஜனவரியில், இந்த குழுமம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ISO/IEC 17025 அங்கீகாரம் பெற்ற உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி ஆய்வகத்துடன், அதன் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் இல்லா கோரிக்கைகளின் தொடர்ச்சியான சுயாதீன சரிபார்ப்பிற்காக ஐந்து ஆண்டுக் கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தைமுறையாக அமைத்தது. இந்த குழுமம் 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் செயலாக்கப்பட்ட உணவு பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளர் எனவும் பெயரிடப்பட்டுள்ளது மற்றும் உலக வங்கி குழுமத்தின் தனியார் துறை பிரிவானசர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆதரவையும் பெற்றுள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278