Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
சுப்பிரமணிக்கு அனுமதி மறுப்பு!

Jul 6, 2026 - 04:10 PM

சுப்பிரமணிக்கு அனுமதி மறுப்பு!
Mobitel Inner 1278

கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 மேற்பட்ட கிலோ மீற்றர் தொலைவு பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சுப்பிரமணி எனும் செல்லப்பிராணி சமூக வலைத்தளங்களில் பிரபல்யமாகியுள்ளதுடன் மனிதர்களைப் போன்று மாமிசமற்ற உணவுகளை உண்டு முல்லைத்தீவில் இருந்து தற்போது அம்பாறை மாவட்டத்தினை வந்தடைந்துள்ளது. 

இந்நிலையில் சுப்பிரமணி எனும் செல்லப் பிராணி காட்டிற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பாதயாத்திரை குழுமத்தின் தலைவரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுற்றாடலியலாளர் கந்தையா பிரியதர்சனி, 

செல்லப்பிராணி பாதயாத்திரை செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் தடையல்ல என்பதுடன் காட்டிற்குள் பயணிக்கும் சகமனிதர்களின் பாதுகாப்பினையும் பாதயாத்திரை மேற்கொள்ளும் செல்லப்பிராணியின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு சுப்பிரமணியை காட்டிற்குள் செல்ல வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்காது என குறிப்பிட்டார். 

மேலும் எதிர்வரும் 10 ஆம் திகதி காட்டுப்பாதை திறந்தவுடன் சுப்பிரமணியை சுற்றாடலியலாளர்கள் குழாம் பொறுப்பெடுத்து வாகனம் ஊடாக கதிர்காமத்திற்கான முனையமான பிள்ளையாரடி எனப்படும் இடத்தில் பாதயாத்திரை குழுவிடம் சுப்பிரமணியை ஒப்படைக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை எனும் இடத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் இருவர் சிறுத்தை தாக்கி மரணமடைந்துள்ளதாகவும், இரண்டு செல்லப்பிராணிகள் சிறத்தை தாக்குதலுக்குட்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

Mobitel 1278