Header Logo
SLIC
பல்சுவை
ரூபா 100 பணத்திற்காக கணவரையே தீ வைத்த மனைவி!

Jul 6, 2026 - 04:37 PM

ரூபா 100 பணத்திற்காக கணவரையே தீ வைத்த மனைவி!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49) இவரது மனைவி பெயர் பிரித்தி தேவி (வயது 45) இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. 

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49) இவரது மனைவி பெயர் பிரித்தி தேவி (வயது 45) இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. 

அவதேஷ் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தநிலையில், நேற்று (05) இரவு 100 ரூபாய் பணம் தொடர்பாக கணவன் - மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் மனைவியை அவமானப்படுத்தியதாக தெரிகிறது. 

இதனால் கோபத்தில் இருந்த பிரித்தி தேவி, கணவர் கட்டிலில் தூங்கி கொண்டிருக்கும் போது அவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 

நள்ளிரவில் திடீரென வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தனர். பொலிஸார் வருவதற்குள் அவதேஷ் உடல் தீ பற்றி எரிந்து கரிக்கட்டையானது. பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

முதலில் தற்கொலை என நாடகமாடப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெட்ரோல் பாட்டில் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் மனைவி பிரித்தி தேவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

இதனை தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரூபா 100 பணத்திற்காக கணவரையே மனைவி தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278