Header Logo
SLIC
கிழக்கு
நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு!

Jul 6, 2026 - 04:42 PM

நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (05) இரவு திடீரென உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய விவகாரம் ஒன்றில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் இவ்வாறு பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழுவினர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில், அவர் ஏற்கனவே உட்கொண்ட போதைப்பொருள் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது பொலிஸாரின் கடுமையான சித்திரவதை மற்றும் தாக்குதல்களினால் இந்த மரணம் சம்பவித்ததா? என்ற இருவேறு கோணங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும், பொலிஸ் உயர்மட்டத்தினரும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278