Header Logo
SLIC
விளையாட்டு
710 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் - பார்சிலோனா செல்கிறார்!

Aug 24, 2026 - 12:09 PM

710 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் - பார்சிலோனா செல்கிறார்!
Mobitel Inner 1278
EDEX Inner

2026 உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயினுக்கு 16 ஆண்டுகள் பின் கிண்ணத்தை வென்று, கோல்டன் பால் உட்பட பல விருதுகள் கைப்பற்றிய அணி தலைவர் ரோட்ரிக், மான்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார். 12 முக்கிய பட்டங்கள் வென்ற நடுக்கள வீரரான அவர், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூபா 710 கோடி ஒப்பந்தத்தில் பார்சிலோனாவுக்கு செல்ல, அந்த அணிக்காக விளையாடுவது தனது கனவு என தெரிவித்துள்ளார். 

2026 கால்பந்து உலகக் கிண்ணத்தில் நெருப்பாக விளையாடிய ரோட்ரிக் தலைமையிலான ஸ்பெயின் அணி, இறுதிப்போட்டியில் ஜாம்பவான் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை 1 - 0 என தோற்கடித்து 16 ஆண்டுகளுக்கு பிறகு கிணணத்தை தட்டிச்சென்றது. 

கடைசியாக 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றிருந்த அந்த அணி 2026 ஆம் அண்டு 2 ஆவது கிண்ணத்தை முத்தமிட்டது. கோல்டன் பால், கோல்டன் கிளவ், இளம் வீரருக்கான விருது என 3 விருதுகளை வென்ற ஸ்பெயின் 2026 உலகக் கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் பலோன் டி'ஓர் விருதையும், 2026 உலகக் கிண்ணத்தில் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதையும் வென்ற ஸ்பெயின் அணி தலைவரும், நடுக்கள வீரருமான ரோட்ரிக், தன்னுடைய அற்புதமான உலகக் கிண்ண பயணத்துக்கு பிறகு தன்னுடைய கிளப் அணியான மான்செஸ்டர் சிட்டியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். 

2019 இல் அட்லெடிகோ மாட்ரிட்டிலிருந்து மான்செஸ்டர் சிட்டிக்கு சாதனை ஒப்பந்தமான 6.28 மில்லியனுக்கு மான்செஸ்டர் சிட்டிக்கு வந்த ரோட்ரிக், கிண்ணங்கள் நிறைந்த 7 சீசன்கள் 298 போட்டிகளுக்கு பிறகு அவ்வணியிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளார். 

ரோட்ரிக்காக 800 கோடிவரை தர தயாராக இருந்த பார்சிலோனா அணி நீண்ட பேச்சுவார்த்தைக்குபிறகு 710 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒப்பந்தம் கையெழுத்திடப்படவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், மான்செஸ்டர் சிட்டியிலிருந்து பார்சிலோனாவுக்கு மாறும் தனது ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக ஸ்பெயின் நடுக்கள வீரர் ரோட்ரி பார்சிலோனா சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பார்சிலோனா அணிக்காக விளையாடுவது தனது "கனவு" என்று கூறினார். 

ரோட்ரிக் தன்னுடைய கிளப் கால்பந்து வாழ்க்கையில் இதுவரை நான்கு பிரீமியர் லீக் பட்டங்கள், இரண்டு FA கிண்ணங்கள், மூன்று EFL கிண்ணங்கள் மற்றும் 2022-23 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் உட்பட மொத்தமாக 12 முக்கிய பட்டங்களை வென்றுள்ளார்.

MOST READ
09
 தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்களை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்கான SEARIC உச்சிமாநாட்டை இலங்கை முதன்முறையாக நடத்த

தென்கிழக்கு ஆசியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர் தலைவர்களை வரவேற்று, 2026-ஆம் ஆண்டிற்கான SEARIC உச்சிமாநாட்டை இலங்கை முதன்முறையாக நடத்த

Aug 24, 2026 - 11:52 AM

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278