Header Logo

இந்தியா
திமுகவுக்கு வரச்சொல்லி 50 கோடி ரூபா பேரம்!

Jul 6, 2026 - 07:08 PM -

0

திமுகவுக்கு வரச்சொல்லி 50 கோடி ரூபா பேரம்!

தமிழக அரசியல் சூழ்நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது. 

த.வெ.க. எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க 180 கோடி ரூபாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந் தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாரை பொலிஸார் தேடி வருகின்றனர். 

எனவே த.வெ.க. ஆட்சியை கலைக்க குதிரை பேரம் நடத்துவதாக தி.மு.க. மீது த.வெ.க. வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறது. 

ஆனால் தி.மு.க. எம்.எல். ஏ.க்களை விலைக்கு வாங்க த.வெ.க. அரசு முயற்சி செய்து வருவதாக தி.மு.க.வும் குற்றம் சுமத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இதுவரை அ.தி.மு.க.வில் இருந்து 6 எம்.எல். ஏ.க்கள் இராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இது அப்பட்டமான குதிரை பேரம் என்று அ.தி.மு.க. குற்றம் சுமத்தி வருகிறது. 

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அமைச்சரவை கூட்டத்தில் 2 தனிநபர்கள் கலந்து கொண்டது குறித்து கவர்னர் விசாரிக்க வேண்டும் என்று கடந்த 04 ஆம் திகதி ஒரே நாளில் எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா சார்பில் கவர்னர் ஆர்.வி.அர்லேகரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர்கள் பெயரில் பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, 

எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்து திமுகவில் இணைந்தால் சுமார் 50 கோடி ரூபா தருவதாக கூறினர். திமுகவில் வந்தால் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசினர். அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்கள் என்னிடம் பேரம் பேசினர். பேரத்துக்கு இணங்காவிட்டால் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டினர். 

பதவியை இராஜினாமா செய்து திமுகவில் இணையும்படி என்னிடம் அக்கட்சியினர் பேரம் பேசினர். ஸ்ரீவைகுண்டத்தில் எனது வெற்றியால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக, அதிமுக, பாஜக இணைந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர். 

தன்னிடம் பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றையும் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் வெளியிட்டார். 

ஏற்கனவே தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த பேரம் புகாரில் சுமார் 10 பேர் கைதான நிலையில் புதிய புகார் ஒன்று வந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!