Jul 6, 2026 - 09:21 PM -
0
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாய் வரி வருவாய் வசூலித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறினார்.
இந்த ஆண்டுக்கான வரி இலக்கு ரூ. 2,206.9 பில்லியன் ஆகும்.
அதன்படி, முதல் ஆறு மாதங்களுக்குள் 1,060 பில்லியன் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் 1,373 பில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட வருவாயை விட 22 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வாறு நிகழாததால் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

