Jul 6, 2026 - 10:24 PM -
0
'தெரண 60 பிளஸ்' (Derana 60 plus) சீசன் 01 போட்டியில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக முடிசூடிய பெந்தரகே ஆரியவங்ச அவர்கள் காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு 70 வயதாகும்.
திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இன்று (06) அதிகாலை 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம், கஹடகஸ்திகிலிய, 09ஆம் வீதி, கோன்வெவ, மஹாபொத்தான என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது அன்னாரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறுதிக் கிரியைகள் நாளை (07) கஹடகஸ்திகிலிய கோன்வெவ மயானத்தில் நடைபெறவுள்ளது.

