Header Logo
SLIC
கிழக்கு
மட்டக்களப்பில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து!

Jul 7, 2026 - 09:59 AM

மட்டக்களப்பில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து!
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீயானது, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 

இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரென வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயானது அடுத்து இருந்த கடைக்கும் வேகமாகப் பரவியுள்ளது. 

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினருக்கு அறிக்கப்பட்ட நிலையில் விரைவாக தீயினை அணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி நகரசபை தீயனைக்கும் பிரிவு,மட்டக்களப்பு தலைமையக தீயணைப்பு பிரிவு மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த தீவிபத்தினால் இரண்டு வர்த்தக நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. 

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், காத்தான்குடி நகரசபை தலைவர் அஸ்பர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தீயினை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினர். 

இந்த தீவிபத்து காரணமாக ஒரு வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றைய வர்த்தக நிலையம் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

தீக்கான காரணம் இதுவரையில் அறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278