Oct 17, 2026 - 06:22 PM

நாடளாவிய ரீதியில் தடைப்பட்டிருந்த மின்சார பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator) நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, மின்சார விநியோகம் மிக விரைவில் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (17) காலை வேளையில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபட்டன.
தற்போது மின்சார பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதால், மின்சார விநியோகம் பல பகுதிகளில் வழமைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
































