Header Logo
SLIC
கிழக்கு
'ஐஸ்' போதைப்பொருளை விழுங்கிய கைதி மரணம்!

Jul 7, 2026 - 11:20 AM

'ஐஸ்' போதைப்பொருளை விழுங்கிய கைதி மரணம்!
Mobitel Inner 1278
EDEX Inner

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. 

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூர் 23 அட்டப்பளம், சகாத் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரே என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

கடந்த 05 ஆம் திகதி மாலை அட்டப்பளம் பகுதியில் நிந்தவூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, அப்பகுதிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த 'ஜெமில்' என்ற நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். 

இதன்போது ஜெமிலிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினும், மற்ற இருவரிடமிருந்து தலா 60 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து கிடைத்த மேலதிக தகவலின் பேரில், மற்றொரு வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், 3 கிராம் 100 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் நான்காவது சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நால்வரும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தனர். சம்பவ தினமான நேற்று (06) அதிகாலை 3.30 மணியளவில் சந்தேக நபர்களில் ஒருவர் வழமைக்கு மாறான முறையில் நடந்து கொண்டுள்ளார். உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரை நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உயிரிழந்த சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்தபோது தான் மறைத்து வைத்திருந்த 'ஐஸ்' போதைப்பொருள் அடங்கிய பக்கெட்டை விழுங்கிவிட்டதாக அவருடன் கைவிலங்கிடப்பட்டிருந்த மற்றொரு கைதி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் அதனை விழுங்கியதாகவே தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை பொது மருத்துவமனையின் தடயவியல் நிபுணரால் இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. 

இதேவேளை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேகநபர்களும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது சந்தேக நபர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த வேடகே தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278