Header Logo
SLIC
Rhythams of Lanka
கிழக்கு
மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Jul 10, 2026 - 12:29 PM

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!
Mobitel inner

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பிரதான பாலங்களில் ஒன்றாகவும் அண்மையில் இடிந்து வீழ்ந்த பாலமாகவும் உள்ள புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது. 

அண்மையில் இந்த பாலம் உடைந்து வீழ்ந்த நிலையில் தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

பாலம் உடைந்துவீழ்ந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபு, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து உடனடியாக பெய்லி பாலம் ஒன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தற்காலிக வீதியினை அமைக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்திருந்த நிலையில் இந்த பணிகள் இன்று நிறைவுபெற்று வீதியை பொதுமக்களின் பாவனைக்கு வழங்கிவைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் நட.கதீசன், நிறைவேற்று பணிப்பாளர் சு.கிருஸாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தற்போது தற்காலிக பாலம் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவான மக்கள் குறித்த பாலத்தின் ஊடாக பயணித்ததை காணமுடிந்தது. 

குறித்த பாலம் தற்காலிக பாலம் என்ற காரணத்தினால் குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

குறித்த பாலம் தற்காலமாக திருத்தப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு நகருக்குள் உள்ள பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்துகள் இலகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara