Header Logo
Mogo Academy

செய்திகள்
சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்காக 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க அவதானம்

Jul 12, 2026 - 08:00 AM -

0

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்காக 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க அவதானம்
Mobitel inner

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வழங்கப்பட்ட இந்தத் தொகை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க இதனைத் தெரிவித்தார். 

'அத தெரண' வினவிய கேள்விக்கு பதிலளித்த அவர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அத்துடன், உயிரிழந்தவர்களின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இதற்கிடையில், இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara