Header Logo
Mogo Academy

செய்திகள்
வவுனியாவில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Jul 12, 2026 - 08:39 AM -

0

வவுனியாவில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Mobitel inner

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இருந்தது. 

இதன்போது சந்தேக நபருக்கு எதிரான முதலாம் குற்றசாட்டு சந்தேகத்துக்கு அப்பால் வழக்கு தொடுனர் தரப்பினரால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அமலவளன் ஆனந்தராஜா தெரிவித்து இருந்தார். 

அதற்கு இணங்க குறித்த குற்றசாட்டிற்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபா அபராதம், அபராத தொகையினை செலுத்த தவறின் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டனை எனும் கட்டளை வழங்கி தீர்ப்பளித்தார். 

குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara