Header Logo
Mogo Academy

செய்திகள்
ஹட்டனில் கால்பந்து போட்டிக்கு இடையே மோதல்

Jul 12, 2026 - 09:12 AM -

0

ஹட்டனில் கால்பந்து போட்டிக்கு இடையே மோதல்
Mobitel inner

'ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்' கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற 'யங் மேட்ஸ்' மற்றும் 'நோர்வூட் சன்ரைஸ்' அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. 

போட்டி முடிவதற்கு 7 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், இந்த மோதல் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்த நேரத்தில் 'யங் மேட்ஸ்' அணி 3 கோல்களையும், 'நோர்வூட் சன்ரைஸ்' அணி ஒரு கோலையும் பெற்றிருந்தன. 

போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்த நிலையில், மைதானத்திற்குள் நுழைந்த பார்வையாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். 

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் மைதானத்திற்குச் சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 

பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எஞ்சிய 7 நிமிட நேரப் போட்டியை வேறொரு மைதானத்தில் நடத்துமாறு 'நோர்வூட் சன்ரைஸ்' அணி நடுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்த இறுதித் தீர்மானத்தை போட்டி ஏற்பாட்டாளர்கள் விரைவில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara