Jul 12, 2026 - 08:26 PM -
0
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கோபத்தின் உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (11) நடந்த போட்டியில் சுவிச்சர்லாந்து அணியின் வீரர்களின் எண்ணிக்கை 10-ஆக குறைக்கப்பட்டது.
இருந்தபோதிலும், 90 நிமிடங்களுக்கு பிறகும் 1-1 என்று சமநிலையில் இருந்த ஆட்டம், இறுதியில் கூடுதல் நேரத்தில் ஆர்ஜென்டினா அடித்த அடுத்தடுத்த இரண்டு கோல்களால் முடிவுக்கு வந்தது.
இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த கோலை, சுவிஸ் அணி திறம்பட முறியடித்ததால், அவர் கடுமையான விரக்தியில் இருந்தார்.
இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோபத்தின் உச்சியில் இருந்தார்.
ஆர்ஜென்டினாவின் தடுப்பாட்ட அரணில் நின்று கொண்டிருந்த மெஸ்ஸியை, பின்னால் செல்லுமாறு நடுவர் கூறியதையடுத்து, அவர் அதிருப்தி தெரிவித்தார்.
அப்போது மெஸ்ஸி போர்த்துகல் நடுவரிடம், என்னிடம் ஒழுங்காக பேசுங்கள் என்று கோபமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர், என்னிடம் ஒழுங்காக பேசுங்கள், என்னை அவமதிக்காதீர்கள், நான் உங்களிடம் ஒழுங்காக பேசினேன் என்று தொடர்ந்து வாக்குவாத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
