Header Logo
Mogo Academy

செய்திகள்
இராகலையில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு வழங்குவோம்

Jul 12, 2026 - 09:15 PM -

0

இராகலையில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வு வழங்குவோம்
Mobitel inner

இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து வௌியேற்றப்பட்டவர்களை பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (12) நேரில் சென்று பார்வையிட்டார். 

நீதிமன்ற தீர்ப்பு ஒன்றுக்கு அமைய, 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கடந்த 10 ஆம் திகதி வௌியேற்றப்பட்டனர். 

குறித்த பிரச்சினை தொடர்பாக பிரதியமைச்சர் நேரில் கேட்டறிந்தார். 

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை ஆராய்ந்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதாக பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமான தீர்வை உரிய நகர்வுகளின் பின்னர் விரைவாக பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக தமது அரசாங்கம் முன்னின்று செயற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara