Header Logo
Mogo Academy

சினிமா
நடிகர் ஆர்யா மீது பொலிஸார் வழக்குப்பதிவு!

Jul 13, 2026 - 10:55 AM -

0

நடிகர் ஆர்யா மீது பொலிஸார் வழக்குப்பதிவு!
Mobitel inner

உயர் ரக திரைப்பட தயாரிப்பு உபகரணங்களை வாடகைக்கு எடுத்துவிட்டு, அதற்கான மீதி தொகையை தரவில்லை எனவும், வாடகை பாக்கியை கேட்க சென்றவரை மிரட்டியதாகவும் நடிகர் ஆர்யா உள்ளிட்ட ‘அனந்தன் காடு’ படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேர் மீது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பொலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

‘தாஹிர் சினி டெக்’ நிறுவனத்திடம் அனந்தன் காடு படக்குழு டிஜிட்டல் கேமராக்கள், லைட்டிங் செட்டப்புகள் மற்றும் பிற திரைப்பட உபகரணங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. படப்பிடிப்பிற்காக சினிடெக் நிறுவனமே உபகரணங்களை ஹைதராபாத்திலிருந்து, கேரளாவிற்கும் எடுத்துச் சென்றுள்ளது. 

சுமார் 2.12 கோடி ரூபாவுக்கு உபகரணங்களை படக்குழு ஒப்பந்தம் செய்ததாகவும், படம் வெளியான நிலையிலும் தற்போது வரை 1.80 கோடி ரூபா வரை மீதித்தொகை வழங்கப்படவில்லை எனவும் நிறுவனம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படம் வெளியாவதற்குள் தொகையை தந்துவிடுவதாக கூறியதாகவும், ஆனால் தற்போதுவரை தரவில்லை எனவும், கடிதம், வாட்ஸ்அப், தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்புகொண்டும் படக்குழுவினர் சரியாக பதிலளிக்கவில்லை என நிறுவனம் புகாரில் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் பணம் கேட்டு சென்றபோது நிறுவனத்தின் மேலாளர் ஜாவேத் அலியை தயாரிப்புக்குழுவினர் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத், படத் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதி கிஷோர் மீது ஜூப்ளி ஹில்ஸ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


MOST READ

காணொளி
இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

Mobitel Upahara