Jul 13, 2026 - 02:38 PM -
0
இலங்கையின் நிதிச்சேவைகள் துறையில் முன்னணி நிறுவனங்களான First Capital Holdings PLC மற்றும் அதன் துணை நிறுவனமான First Capital Treasuries PLC ஆகியவற்றின் நிலையான கண்ணோட்டத்துடன் கூடிய A+ நிறுவன மதிப்பீட்டை லங்கா ரேட்டிங் ஏஜென்சி (LRA) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது இந் நிறுவனங்களின் வலுவான நிலையை வெளிப்படுத்துகின்றது.
JXG (ஜனசக்தி குழுமம்) இன் அங்கமாக இயங்கும் இவ்விரு நிறுவனங்களும் இலங்கையின் மூலதனச் சந்தைகள் மற்றும் நிதி இடைநிலை (intermediation) சேவைகள் துறையில் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இம் மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டிருப்பது, இலங்கையின் நிதிச்சேவைத் துறையில் குழுமம் கொண்டிருக்கும் வலுவான நிலையையும் நிதி ஒழுக்கத்தை தொடர்ந்து பேணும் திறன், உறுதியான நிறுவன ஆளுகை மற்றும் முதன்மை அரசுப் பத்திர வணிகம் (Primary Dealership), நிறுவன நிதி ஆலோசனை, செல்வ முகாமைத்துவம் மற்றும் பங்கு முகவர் சேவைகள் (stockbroking)ஆகியவற்றை உள்ளடக்கிய பல்துறை வணிக மாதிரி ஆகியவற்றின் வலிமையை பிரதிபலிக்கிறது.
2025/26 நிதியாண்டில், First Capital Holdings PLC உறுதியான நிதிச் செயல்திறனை வெளிப்படுத்தியதுடன், வரிக்குப் பின்னரான ஒருங்கிணைந்த இலாபமாக ரூ.2.1 பில்லியனை பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டில் இத்தொகை ரூ.5.0 பில்லியனாக இருந்தது. மேலும், குழுமம் வலுவான நிதிநிலை அறிக்கையை பராமரித்ததுடன் அதன் மொத்த சொத்துக்கள் சுமார் ரூ. 74.2 பில்லியனாகவும், பங்குதாரர் நிதி (Equity) ரூ.8.7 பில்லியனாகவும் இருந்தது.
குழுமத்தின் முக்கிய துணை நிறுவனங்களின் தொடர்ச்சியான பங்களிப்பும் இச்செயல்திறனுக்கு ஆதாரமாக அமைந்தது. அரசுப் பத்திர வணிகம் தொடர்பான குழுமத்தின் முதன்மை முகவர் பிரிவான First Capital Treasuries, குழுமத்தின் வணிகச் செயல்பாடுகளிற்கு பெரும்பான்மை பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கியது. இது அரசுப் பத்திரச் சந்தையில் நிறுவனத்தின் நிபுணத்துவம், வட்டிவீத மாற்றங்களுக்கிடையிலும் நிலையான வருவாய் ஈட்டும் அதன் திறன் மற்றும் விவேகமான முதலீட்டு கால முகாமைத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது. இதனுடன், பிணைய வணிகப் பிரிவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதோடு, செல்வ முகாமைத்துவம், நிறுவன நிதி ஆலோசனை மற்றும் பங்கு முகவர் சேவைகள் ஆகியனவும் சாதகமான பெறுபேறுகளைப் பதிவு செய்து, குழுமத்தின் பல்துறை வருமான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தின.
First Capital Holdings PLC, அதன் வலுவான மூலதனம், நிர்வகிக்கப்பட்ட கடன் சுமை, கட்டுப்படுத்தப்பட்ட தொடர்புடைய தரப்பு வெளிப்பாடு மற்றும் நீடித்த கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் ஆதரவுடன், கடன் பத்திரங்கள் (Debentures), வணிகப் பத்திரங்கள் (Commercial Papers) மற்றும் வங்கிக் கடன்கள் ஆகியவற்றில் நன்கு கட்டமைக்கப்பட்ட நிதிநிலையைத் தொடர்ந்து பராமரித்து வருகிறது. தரச்சான்று மீளுறுதிப்படுத்தப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த First Capital Holdings PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டில்ஷான் வீரசேகர, எமது A+ தரச்சான்று நிலையான கண்ணோட்டத்துடன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது, குழுமத்தின் நிதி வலிமை, ஒழுக்கமான செயற்பாட்டு அணுகுமுறை மற்றும் பல்வேறு சந்தை சுழற்சிகளிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய நிலைத்தன்மைக்கு கிடைத்துள்ள வலுவான அங்கீகாரமாகும். இது எமது பல்துறை வணிக மாதிரியின் வலிமையையும் எமது துணை நிறுவனங்களின் தொடர்ச்சியான பங்களிப்பையும், குறிப்பாக First Capital Treasuries PLC, வட்டி வீதங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு மத்தியிலும் அரசுப் பத்திரத் துறையில் முன்னணித் தலைமையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதையும் எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் மூலதனச் சந்தைகளின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் நீடித்த பெறுமதியை உருவாக்குவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” எனத் தெரிவித்தார்.
இந்த A+ தரச்சான்று, வலுவான நிதி ஒழுக்கம், சிறந்த நிறுவன ஆளுகை மற்றும் மூலதனச் சந்தையில் தொடர்ச்சியான தலைமைத்துவம் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக First Capital இன் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இதேவேளை, தரச்சான்று மீளுறுதிப்படுத்தப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த லங்கா ரேட்டிங் ஏஜென்சி (LRA) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Dr.கென்னத் டி சில்வா, First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகிய நிறுவனங்களின் A+ நிறுவன தரச்சான்று, நிலையான கண்ணோட்டத்துடன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது, குழுமத்தின் வலுவான நிதி அடித்தளம், உறுதியான நிறுவன ஆளுகைக் கட்டமைப்பு, ஒழுங்குபடுத்தப்பட்ட இடர் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் மாறிவரும் சந்தைச் சூழல்களிலும் வெளிப்படுத்தியுள்ள நிலைத்தன்மை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. விவேகமான மூலதன முகாமைத்துவம் மற்றும் நிலையான வருவாய் உருவாக்கும் திறனால் ஆதரிக்கப்படும் பல்துறை வணிக மாதிரியை குழுமம் தொடர்ந்து பேணிவருகிறது. First Capital Treasuries, இலங்கையின் அரசுப் பத்திரச் சந்தையில் முக்கிய பங்காற்றும் நிறுவனமாக தனது நிலையைத் தக்கவைத்திருப்பதோடு, குழுமமும் நிதிச்சேவைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் தனது சந்தை நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. நடுத்தர காலத்திலும் குழுமம் தனது நிதி வலிமை, மூலதன நிலை மற்றும் சந்தை முன்னிலையைத் தொடர்ந்து பேணும் என்ற எமது எதிர்பார்ப்பையே இந்த நிலையான கண்ணோட்டம் பிரதிபலிக்கிறது. எனக் குறிப்பிட்டார்.
First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், முதன்மை அரசுப் பத்திர வர்த்தகர், பெருநிறுவன நிதி ஆலோசகர், சொத்து முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, செயலாற்றுகை முதலில் எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. மூலதனச் சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்துத்தை கொண்டுள்ள First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC (துணை நிறுவனம்) ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகள், லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் (LRA) நிலையான கண்ணோட்டத்துடன் கூடிய ‘A+’ என்னும் நிறுவன மதிப்பீடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
First Capital Treasuries PLC பற்றி
1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட First Capital Treasuries PLC, இலங்கையின் நிதிச்சந்தையில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமாகும். மேலும், வங்கியல்லாத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நாட்டின் முதல் முதன்மை அரசுப் பத்திர விற்பனையாளர் (Non-Bank Primary Dealer) அனுமதிப்பத்திரத்தைப் பெற்ற நிறுவனமும் இதுவாகும். அரசுப் பத்திர முதன்மை முகவராக, FCT தனது பல தசாப்த கால நிபுணத்துவம் அரசாங்கத் திறைசேரிப் பிணைகள் மற்றும் உண்டியல்கள் (Treasury Bills & Bonds) தொடர்பான விரிவான முதலீட்டுத் தீர்வுகளை வழங்கி வருகிறது.
நிறுவன மற்றும் தனிநபர் முதலீட்டாளர்களுக்கு சந்தை அறிவு, நம்பகமான செயற்பாட்டு திறன் மற்றும் புதுமையான முதலீட்டு உத்திகளை ஒருங்கிணைத்து, அவர்களின் நிதி இலக்குகளை அடைய உதவுவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.
First Capital Holdings PLC - https://firstcapital.lk/
லங்கா ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட் பற்றி
லங்கா ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட் (LRA) 2021ஆம் ஆண்டின் SEC சட்டம் இல.19இன் கீழ் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் (SEC) ஒழுங்குபடுத்தப்படும் ஒரு கடன் தரமதிப்பீட்டு நிறுவனம் ஆகும். LRA, இலங்கையின் நிதிச்சந்தைகள் தொடர்பாக தகவலறிந்த முடிவெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், சுதந்திரமான, நோக்கமிக்க மற்றும் வெளிப்படையான கடன் இடர் மற்றும் நிலைத்தன்மை மதிப்பீடுகளை வழங்குகிறது.
