Header Logo
SLIC
வணிகம்
கிரிந்திவெலயில் பசுமைப் பயணம்: நிறுவனத்திற்குச் சொந்தமான 36வது கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தது செலிங்கோ லைஃப்

Jul 13, 2026 - 02:45 PM

கிரிந்திவெலயில் பசுமைப் பயணம்: நிறுவனத்திற்குச் சொந்தமான 36வது கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தது செலிங்கோ லைஃப்
Mobitel Inner 1278
EDEX Inner

செலிங்கோ லைஃப் நிறுவனமானது நிறுவனத்திற்குச் சொந்தமான தனது 36வது கிளை கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை, கிரிந்திவெல பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டுவதன் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் செலிங்கோ லைஃப், நிலைத்தன்மை வாய்ந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டிலும் வாடிக்கையாளர் சேவையை மேலும் வலுப்படுத்துவதிலும் தனது தொடர்ச்சியான முதலீட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், செலிங்கோ லைஃப் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன், முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. துஷார ரணசிங்க, நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், அதேபோல் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

புதிய கிளைக் கட்டிடம், நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் நிர்மாணிக்கப்படுவதுடன், நிறுவனத்தின் பசுமைக் கட்டிடக் கருத்தாக்கத்திற்கு ஏற்ப, சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்புக் கொள்கைகள் மற்றும் ஆற்றல் திறன் மிக்க தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகையில் அபிவிருத்தி செய்யப்படும். 

3,440 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்ட இந்த கிரிந்திவெல கிளைக் கட்டிடம், தேசிய பொறியியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERD) உருவாக்கிய உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட முன்கூட்டியே தயாரிக்கப்படும் கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும். மேலும், இக்கட்டிடம் 100 சதவீதம் தன்னிறைவு கொண்ட சூரிய சக்தி முறைமை மூலம் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதால், தேசிய மின்சார வலையமைப்பைச் சார்ந்திருக்கும் தேவையில்லை. 

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தின் முக்கிய நிலைத்தன்மை அம்சங்களில், இயற்கைக் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வடிவமைப்பு, நில அமைப்புக்கு ஏற்ற கட்டிடத் திட்டம், இன்டர்லொக் கற்களுக்கிடையில் புல் வளர்க்கப்பட்ட பசுமைப் பகுதி, சக்தி திறன் மிக்க குளிரூட்டல் மற்றும் ஒளியமைப்பு வசதிகள், மழைநீர் சேகரிப்பு முறைமை என்பன அடங்குகின்றன. 

மேலும், தனித்துவமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) மூலம் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர், கழிப்பறை பயன்பாடு மற்றும் தோட்டப் பராமரிப்பிற்காக மீள பயன்படுத்தப்படும். செலிங்கோ லைஃப்பானது ,இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக சந்தை முன்னணியில் திகழ்ந்து வருகிறது. World Finance நிறுவனத்தால் தொடர்ந்து 12வது ஆண்டாக இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 20வது ஆண்டாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆண்டுக்கான மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் (People’s Life Insurance Service Provider of the Year) விருதையும் பெற்றுள்ளது. காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை பாதுகாத்து, இடர்களைக் குறைக்கும் புத்தாக்கமான காப்புறுதி தீர்வுகளை செலிங்கோ லைஃப் வழங்கி வருகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டில் டீசயனெ குiயெnஉந வெளியிட்ட மதிப்பீட்டின்படி, செலிங்கோ லைஃப் Brand Finance மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாகவும், நாட்டின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வர்த்தகநாமங்களில் 22வது மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278