Header Logo
Mogo Academy

செய்திகள்
ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு 20 சதவீத கட்டணம் அறவிட டிரம்ப் திட்டம்

Jul 13, 2026 - 09:01 PM -

0

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு 20 சதவீத கட்டணம் அறவிட டிரம்ப் திட்டம்
Mobitel inner

ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கடற்படைத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

தனது உத்தியோகபூர்வ 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

அதிபர் டிரம்ப் இட்டுள்ள முழுமையான பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 

"ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது, ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து திறந்திருக்கும். நாம் 'ஈரானிய கடற்படைத் தடையை' மீண்டும் அமுல்படுத்துகிறோம். ஈரான் கப்பல்கள் அல்லது அவர்களின் வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் இது தடுக்கும் என்பதால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. மற்ற அனைத்து நாடுகளும் இந்த நீரிணையை நியாயமான முறையிலும் திறந்த நிலையிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும். 

இனிமேல் அமெரிக்கா, 'ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலன்' என்று அழைக்கப்படும். ஆனால் நியாயத்தின் அடிப்படையில், உலகின் இந்த அதிதீவிர பதற்றமான பிராந்தியத்திற்கு பாதுகாப்பை வழங்குவதற்காக ஏற்படும் அனைத்து செலவுகளுக்கும் ஈடாக, அந்த கடல் வழித்தடத்தின் ஊடாக கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும் 20% வீதத்தில் நமக்கு பணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இதற்கான செயல்முறை மற்றும் கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்." என்றார். 

ஜனாதிபதி இந்த புதிய அறிவிப்பின் மூலம், ஹோர்முஸ் நீரிணை ஊடாக பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் ஏனைய பணக்கார நாடுகளிடம் இருந்து 20% பாதுகாப்பு வரியை வசூலிக்க அமெரிக்கா தயாராகி வருவது தெளிவாகத் தெரிவதுடன், இது உலகளாவிய சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.


MOST READ

காணொளி
வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

Mobitel Upahara