Header Logo
Mogo Academy

சினிமா
இதை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் நடித்​திருக்க முடியாது!

Jul 14, 2026 - 12:44 PM -

0

இதை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் நடித்​திருக்க முடியாது!
Mobitel inner

மிஷ்கின் இயக்கி இசை அமைத்​துள்ள படம், ‘டிரெ​யின்’. விஜய் சேதுப​தி, ஸ்ரு​திஹாசன், நாசர், கே.எஸ்​.ரவி​கு​மார், நரேன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். 

கலைப்​புலி எஸ்.தாணு​வின் வி கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்​தின் டீஸர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், சசி, பாரத்​திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்​டனர். 

விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “என்​னுடைய ‘நந்​தலாலா’ படக் கதையைச் சொல்​வதற்​காகத் தயாரிப்​பாளர் தாணு சாரை சந்தித்தேன். அவருக்கு அந்த கதை ஒன்​றுமே புரிய​வில்​லை. பிறகு எவ்வளவு பட்​ஜெட் என்று கேட்​டார். 4 கோடி ரூபா என்​றேன். அவர் ஒரு 60 கோடி​ ரூபாவில் படம் பண்​ணலாம் என்​றார். ‘இந்​தப் படத்​துக்கு அவ்​வளவு தேவை இருக்​காது, இது சாதாரண கதை’ என்​றேன். அந்தக் கதை விக்​ர​முக்கு பிடித்​திருந்​தது. ஆனால் பண்ண முடியவில்லை. 

ஆனாலும் தாணு சார் அப்​போது எனக்கு ஒரு அட்​வான்ஸ் கொடுத்தார். நீண்ட நாளுக்​குப் பிறகு தாணு சாரை சந்​தித்து படம் பண்​ணலாம் என்​றேன். விஜய் சேதுப​தியை வைத்​துப் பண்ணலாம் என்​றார். விஜய் சேதுபதி என்​னுடன் ஒரு படத்​தில் 2 நாட்​கள் நடித்​தார். பிறகு 10 வருடத்​துக்​குப் பிறகு இணைந்துள்ளோம். 

முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்​க​வில்​லை. பிறகு அவர் பெரிய நடிக​ராக வளர்ந்து விட்​டார். என்​னுடைய ‘சைக்​கோ’ படம் பாத்​து​விட்டு என்னைக் கட்​டிப் பிடித்து முத்​தம் கொடுத்​தார். அவரை மிகச் சிறந்த மனித​னாகப் பார்த்​தேன். 

இந்​தக் கதையை விஜய் சேதுப​திக்​காகப் பார்த்​துப் பார்த்து எழுதினேன். கதை​யில், வாழ்க்கை முடிந்​து​விட்​டது என நினைத்துக் கொண்​டிருக்​கிற கதா​பாத்​திரம் அவருக்​கு. இந்​தப் படத்தை விஜய் சேதுப​தி​யைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடி​யாது. கமல் சார் கூட பண்​ணியிருக்க முடி​யாது. 

விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவர​வில்​லை. படம் நன்​றாக இருந்​தால்​தான் ஓடும் என்​பது தெரி​யும். விஜய் சேதுப​தி​யின்​ நடிப்​பை என்​னால்​ மறக்​கவே முடி​யாது என தெரிவித்தார்​.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara