Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
வெங்கட் பிரபுவின் 'சென்னை 28 பார்ட் 3' ரெடி!

Jul 14, 2026 - 01:38 PM

வெங்கட் பிரபுவின் 'சென்னை 28 பார்ட் 3' ரெடி!
Mobitel Inner 1278

தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாத ஒரு எவர்கிரீன் திரைப்படம் என்றால் அது இயக்குநர் வெங்கட் பிரபுவின் அறிமுகத் திரைப்படமான 'சென்னை 600028'. 

சென்னை இளைஞர்களின் வாழ்வியலையும், தெருமுனை கிரிக்கெட்டையும் மையமாக வைத்து வெளியான இதன் முதல் பாகமும், கிராமத்துப் பின்னணியில் வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. 

இந்நிலையில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் விதமாக இப்படத்தின் 'மூன்றாம் பாகம்' அதிகாரப்பூர்வமாகத் தயாராகி வருகிறது. 'தி பாய்ஸ் ஆர் பேக்' என்ற முழக்கத்துடன், சென்னை 28 அணியினர் தங்களது அடுத்த இன்னிங்ஸை ஆடத் தயாராகிவிட்டனர். 

இப்படத்தின் முதற்கட்டப் பணிகளான திரைக்கதை எழுதும் வேலைகள் அண்மையில் இலங்கையில் வைத்து முழுமையாக நிறைவடைந்தன. 

இதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தகட்டப் பணிகளுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பிற்கான தகுந்த இடங்களைத் தேர்வு செய்யும் 'லொகேஷன் ஸ்கவுட்டிங்' பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

முதல் பாகத்தில் சென்னை மந்தவெளி ஏரியாவிலும், இரண்டாம் பாகத்தில் தேனி பக்கமுள்ள கிராமத்திலும் கிரிக்கெட் விளையாடி ரகளை செய்த 'ஷார்ஸ்' அணியினர், இந்த முறை தாய்லாந்து நாட்டுக்கு சர்வதேச அளவில் பயணம் செய்யவுள்ளனர். 

வழக்கமான வெங்கட் பிரபு பாணியில் ஏகப்பட்ட காமெடி, கலாட்டா, நட்பு மற்றும் புதிய சவால்களுடன், கிரிக்கெட் பின்னணியில் ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக இந்தத் திரைப்படம் உருவாகவுள்ளது. 

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த 'சென்னை 28 பாகம் 3' குறித்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278