Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
AK64 படத்தை தயாரிக்கும் அஜித் குமார்!

Jul 14, 2026 - 01:50 PM

AK64 படத்தை தயாரிக்கும் அஜித் குமார்!
Mobitel Inner 1278

குட் பேட் அக்லியை அடுத்து அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 64 படத்தை இயக்கவிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்புக்கு பிறகு கார் ரேஸ்களில் அதிக பிசியானார் அஜித். 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் போகிறோம், விறுவிறுப்பாக வேலை பார்க்கிறோம். இந்த படத்தில் நிறைய சர்பிரைஸ் இருக்கிறது என்றார் ஆதிக் ரவிச்சந்திரன். 

அதனால் பிப்ரவரி மாதம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவில்லை. ஜூலை மாதமும் பாதி முடிந்துவிட்டது. இந்நிலையில் ஏ.கே. 64 படத்தை நான் தயாரிக்கிறேன் என்று அஜித் குமார் முன்வந்திருக்கிறாராம். 

ஏ.கே. 64 ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்குமாம். இந்த மாத இறுதியிலேயே அஜித் குமார் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமாம். ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமார் இரண்டாவது முறையாக சேர்ந்து வேலை செய்யும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

திட்டமிட்டபடி ஏ.கே. 64 படப்பிடிப்பு துவங்காமல் போன நிலையில் கார் ரேஸில் மட்டுமே இனி பங்கேற்பது என முடிவு செய்து நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் அஜித் குமார் என பேச்சு கிளம்பியது. மேலும் அஜித் குமாரின் கடைசி படமே குட் பேட் அக்லி தான். ஏ.கே. 64 படம் கைவிடப்பட்டது என்றார்கள். ஆனால் தனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த சினிமாவை விட்டு அஜித் குமார் விலகவும் இல்லை, ஏ.கே. 64 படம் கைவிடப்படவும் இல்லை என்பது தெரிய வந்தது. 

ஆதிக்கை அடுத்து சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்கும் ஐடியாவில் இருக்கிறார் அஜித் குமார். 

அவரின் ரேஸின் பயணம் குறித்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருக்கிறார். அதை தயாரிக்க அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் துவங்கினார். அந்த நிறுவனம் படங்களை தயாரிக்காது என்று கூறப்பட்ட நிலையில் ஏ.கே. 64 படத்தை தயாரிக்க விருக்கிறது. 

கார் ரேஸ்களுக்காக துபாயில் வசித்து வரும் அஜித் குமார் தன் தாய் மோகினி மணி இறந்தபோது சென்னைக்கு வந்து இறுதிச்சடங்குகளை செய்தார். 

இதற்கிடையே மீண்டும் படங்களில் நடிக்குமாறு அஜித் குமாருக்கு அழைப்பு விடுத்து அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் நடிகர் மன்சூர் அலி கான். அஜித் குமாரை மீண்டும் பெரிய திரையில் பார்க்க சினிமா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

அஜித் குமார் ரேஸிங் அணி குறித்த அப்டேட்டுகள் தான் அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஏதாவது ஒரு அப்டேட் வந்து ஏ.கே.வை பார்க்க முடிகிறதே என்று ஆறுதல் அடைந்து வருகிறார்கள் ரசிகர்கள். 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்ந்து ரேஸ்கள் இருக்க, புதுப்பட வேலையை துவங்க அஜித் குமார் முடிவு செய்திருப்பது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்திருக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278