Jul 14, 2026 - 03:49 PM -
0
மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான 'மைக்கேல்' பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து இருக்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 10,000 கோடி ரூபாய் வசூலை குவித்த முதல் பயோபிக் படம் என்ற வரலாற்றுச் சாதனையை மைக்கேல் திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. பாடல் மற்றும் நடனத்தால் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவரான மறைந்த மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான படம் மைக்கேல்.
அன்டோன் ஃபுகுவா இயக்கத்தில், மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியா உட்பட உலகம் முழுக்க வசூலை வாரிக் குவித்த இப்படம் அதிக வசூல் செய்த பயோபிக் படம் என்ற சாதனையை ஏற்கெனவே படைத்தது.
தற்போது ஒரு பில்லியன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் பயோபிக் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. இப்படம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
