Header Logo
Mogo Academy

விளையாட்டு
ரோகித் சர்மா மீது கோபத்தில் பிசிசிஐ!

Jul 14, 2026 - 05:12 PM -

0

ரோகித் சர்மா மீது கோபத்தில் பிசிசிஐ!
Mobitel inner

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று (14) ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் அணி தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ரோஹித் சர்மா மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் திறன்பட தவறினால், அவரை அணியில் இருந்து நீக்க பிசிசிஐ தயாராக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. 

ஆண்டு முழுவதும் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் வெள்ளைப் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறைவாகவே விளையாடுவதால், அவர்களுக்கான மாற்று வீரர்களைத் தயாராக வைத்திருக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. 

இதற்காக, அணியின் பிளேயிங் லெவனில் இருந்து மூத்த வீரர்களைச் சுழற்சி முறையில் ஓய்வில் வைக்கவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போதே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது. 

அப்போது ரோஹித்க்கு ஓய்வளிக்கப்பட்டு, அணி தலைவர் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவதாக இருந்தது. ஆனால், இறுதியில் கில் மூன்றாவது இடத்திற்கு இறங்க ஒப்புக்கொண்டதால், ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

அந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். இதனால், ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறையும் பட்சத்தில், கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகத்தின் திட்டங்களில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

இதேபோன்ற அழுத்தம் விராட் கோலிக்கும் உள்ளதா என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்மன் கில், 

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அனுபவம் மற்றும் ஆட்டத் திறனை ஆதரித்துப் பேசினார். அதோடு, விராட் கோலியைப் பற்றி அவர் குறிப்பாகக் குறிப்பிட்டார். 

ரோஹித் சர்மா கடைசி போட்டியில் ஃபார்முக்கு திரும்புவதை விட, தொடரின் தொடக்கத்திலிருந்தே வலுவாக விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது . 

39 வயதான ரோஹித் சர்மாவிற்கு இங்கிலாந்தில் உள்ள அவரது சிறப்பான ஆட்டப் புள்ளிவிவரங்கள் நம்பிக்கையளிக்கலாம். அங்கு அவர் 64.91 சராசரியுடனும், 90.78 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 7 சதங்கள் உட்பட 1,428 ஓட்டங்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 79 ஓட்டங்களை அடித்திருந்தார். அந்த தொடரில் ரோகித் அடித்த ஸ்கோர் 16, 48 மற்றும் 79 ஓட்டங்கள் ஆகும்.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara