Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
'DC' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் – ரிலீஸ் திகதி மாற்றம்!

Jul 16, 2026 - 02:08 PM

'DC' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் – ரிலீஸ் திகதி மாற்றம்!
Mobitel Inner 1278

முன்னணித் தமிழ்த் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் 'DC' திரைப்படத்தின் தணிக்கை விவரங்கள் மற்றும் புதிய உலகளாவிய ரிலீஸ் திகதியைத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டு, இதற்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. 'ராக்கி', 'சாணிக் காயிதம்' போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அவரின் வழக்கமான பாணியில், இரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும், வன்முறைகளும் நிறைந்துள்ளதால் தணிக்கைக் குழு இந்தச் சான்றிதழை வழங்கியுள்ளது. 

முன்னதாக இத்திரைப்படம் ஜூலை 31 ஆம் திகதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 7 ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. 

நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 23 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளதால், வசூலை பாதிக்காத வகையிலும், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கவும் 'DC' மற்றும் சில முக்கியமான தமிழ் படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

DC படத்திற்கு "தி பிளடி வேலண்டைன்" என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. கிளாசிக் காவியமான 'தேவதாஸ்' கதையை முற்றிலும் ஒரு நவீன கேங்க்ஸ்டர் காதல் டிராமா பாணியில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உருவாக்கியுள்ளார். 

இதில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா காபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற 'ராகா ஆப் ரிவெஞ்ச் ' மற்றும் 'ஹேங்கோவா' ஆகிய பாடல்கள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278