Header Logo
Mogo Academy

விளையாட்டு
அர்ஜென்டினா வீரரை தாக்கிய பெல்லிங்ஹாம்

Jul 17, 2026 - 03:50 PM -

0

அர்ஜென்டினா வீரரை தாக்கிய பெல்லிங்ஹாம்
Mobitel inner

அமெரிக்காவில் அட்லாண்டா ஸ்டேடியத்தில், உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடியது. 

போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2 ஆவது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2 ஆவது கோலும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. 

போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சமயத்தில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்ஹாம், அர்ஜென்டினா அணியின் மாற்று வீரரான வாலண்டின் பார்கோவை தலையில் தட்டினார். அவர் பதிலுக்கு பெல்லிங்ஹாமை தள்ளினார். அப்போது பெல்லிங்ஹாமை, அர்ஜென்டினா வீரர்கள் சூழ்ந்தனர். நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த பயிற்சியாளர் குழுவினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். 

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara