Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?

Jul 20, 2026 - 10:24 AM

சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?
Mobitel Inner 1278

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஒல்லியான முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த ஜூலை 17 ஆம் திகதி மும்பையில் உள்ள குடிசைப் புனரமைப்பு ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் கான் கலந்து கொண்டார். 

அங்கு அமைக்கப்பட்டிருந்த அதிநவீன தரவு சேகரிப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு தொழில்நுட்ப சர்வர் அறையை அவர் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. 

அதில், தாடி மீசையின்றி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வெளிர் நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து சல்மான் கான் காட்சியளித்தார். 

வழக்கமான அவரது கட்டுமஸ்தான உடலமைப்பு இல்லாமல், அவர் மிகவும் ஒல்லியாகக் காணப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

60 வயதான சல்மான் கான் தற்போது பார்க்க 80 வயது முதியவர் போல காட்சி அளிப்பதாகவும், அவருக்கு என்ன ஆனது என்றும் பலர் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அவருக்கு ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளதா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மற்றொரு தரப்பினர், "60 வயது நபர், 60 வயது நபரைப்போல இயற்கையாகக் காட்சியளிக்கிறார். இதில் தவறு எதுவும் இல்லை" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த சர்ச்சை ஒருபுறமிருக்க, சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'மாத்ருபூமி' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. 

இத்திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் 'பேட்டில் ஆஃப் கல்வான்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. 

அபூர்வா லக்கியா இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில், சல்மான் கானுடன் இணைந்து சித்ராங்கதா சிங் மற்றும் முகேஷ் ரிஷி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278