Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல்!

Jul 20, 2026 - 12:11 PM -

0

ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல்!
Mobitel inner

2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியடைந்தது. 

தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர்களை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கூடுதல் ஆட்ட நேரத்தின் 106 ஆவது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

ஆட்ட முடிவில் நடுவர் இறுதி விசிலை ஊதியதும், ஸ்பெயின் வீரர்கள் தங்களது வெற்றியை மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடத் தொடங்கினர். 

அப்போது விரக்தியில் இருந்த அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து மோதலில் ஈடுபட்டார். 

கார்சியாவின் கழுத்தைப் பிடித்து பரேடெஸ் இரண்டு முறை தாக்கினார். 

இந்த மோதலைத் தடுக்க வந்த ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் காவி ஓடி வந்தார். ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த பரேடெஸ், காவியின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார். 

இதனுடன் அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா, தலையிட்டு காவியை கீழே தள்ளியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. 

நிலைமை மோசமாவதைக் கண்ட அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனிஉடனடியாக மைதானத்திற்குள் விரைந்து வந்து தன் அணி வீரர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்துச் சென்றார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara