Header Logo
Mogo Academy

விளையாட்டு
3 விருதுகளை அள்ளிய ஸ்பெயின்!

Jul 20, 2026 - 01:38 PM -

0

3 விருதுகளை அள்ளிய ஸ்பெயின்!
Mobitel inner

2026 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ண தொடர் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. 48 அணிகளுடன் தொடங்கிய இந்த பயணம், பல வரலாற்று போட்டிகளுடன் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பு உலக சாம்பியனாக களம்கண்ட அர்ஜெண்டினா அணி, நடப்பு யூரோ சாம்பியனான ஸ்பெயினை எதிர்கொண்டு விளையாடியது. போட்டி நேரம் முழுவதும் இரண்டு அணிகளும் கோலடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தில் கோலடித்த ஸ்பெயின் அணி 1 - 0 என வென்று கோப்பையை தட்டிச்சென்றது. 

தொடர் முடிவுக்கு பிறகு தங்க காலணி, தங்க பந்து, தங்க கையுறை மற்றும் இளம் வீரருக்கான விருது என 4 விருதுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் 4 மதிப்புமிக்க விருதுகளில் மூன்றை கோப்பை வென்ற ஸ்பெயின் அணியே தட்டிச்சென்றுள்ளது. இந்தப்பட்டியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் பெயர் கடைசிபோட்டியின் மோசமான ஓட்டத்திற்கு பின் இடம்பெறவில்லை. 

நடப்பு உலகக் கிண்ண தொடரில் மொத்தம் 10 கோல்களை அடித்த பிரான்ஸ் அணியின் தலைவர் எம்பாப்பே தங்க காலணி விருதை தட்டிச்சென்றார். கடந்த 2022 உலகக் கிண்ணத்திலும் தங்க காலணி விருதை வென்றிருந்த இவர், வரலாற்றில் 2 முறை வென்ற முதல் வீரராக தடம்பதித்தார். 

தொடரில் சிறந்து விளங்கும் வீரருக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதை மெஸ்ஸி வெல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் அணியின் தலைவர் ரோட்ரி தட்டிச்சென்றுள்ளார். தொடர் முழுவதும் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்த ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்டராக செயல்பட்ட ரோட்ரி எதிரணியிரனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். அதிலும் பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 90 நிமிடங்கள் முழுவதும் களத்திலிருந்த அவர், ஸ்பெயின் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றார். 

நடப்பு உலகக் கிண்ண தொடரில் ஸ்பெயின் அணி இறுதிப்போட்டியையும் சேர்த்து 7 ஆட்டங்களில் கோலையே விட்டுக்கொடுக்காமல் க்ளீன் ஷீட்டாக விளங்கியது. ஒரு உலகக் கிண்ண சீசனில் 5 இற்கும் மேற்பட்ட போட்டிகளில் ஒரு அணி க்ளீன் ஷீட்டை கொண்டிருப்பது இதுவெ முதல்முறை. அதை சாத்தியமாக்கிய ஸ்பெயின் அணியின் கோல்கீப்பர் உனாய் சைமன் தங்க கையுறை விருதை வென்றார். 

ஸ்பெயின் 19 வயதான மையப் பாதுகாவலர் பாவ் குபார்சி, போட்டியின் சிறந்த இளம் வீரருக்கான விருதைப் பெற்றார். 

போட்டித்தொடர் முழுவதும் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுக்கொடுத்த ஸ்பானியப் பாதுகாப்பு அணியில் அவர் ஒரு முக்கியப் பங்கு வகித்தார். மேலும், இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை இலக்கை நோக்கி ஒன்றுகூட விடாமல் இரண்டே ஷாட்கள் மட்டுமே அடிக்க அனுமதித்தார்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara