Header Logo
Mogo Academy

வடக்கு
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Jul 22, 2026 - 12:52 PM -

0

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!
Mobitel inner

யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே குறித்த அமைப்பின் ஸ்தாபகரான டேஷ் பாலசுப்ரமணியம் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை வரையிலான ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட்ட நூல் அமைப்பின் தோழர்களோடு தாம் நிறைவு செய்துள்ளதாகவும், குறித்த பயணம் தமது சமூக சிந்தனைகளை மேம்படுத்த உதவுவதாகவும் குறிப்பிட்ட அதேவேளை குறித்த பயணத்திற்கான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் வெளிநாட்டு வாழ். மக்களின் நிதி அன்பளிப்புகள் கிடைக்கப்பெறுவதாகவும் குறித்த உதவி மூலம் இங்குள்ள செயற்றிட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

இவ்வாறான செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூலை மாதமும் நடாத்தப்படும் எனவும் தெரிவித்த டேஷ் பாலசுப்பிரமணியம் இதன்மூலம் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்தும் நீண்டகால இலக்கினைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

--

MOST READ

காணொளி
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

Mobitel Upahara