Header Logo
Mogo Academy

வடக்கு
9 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Jul 24, 2026 - 06:32 AM -

0

9 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
Mobitel inner

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கடந்த 22 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (23) உத்தரவிட்டார். 

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த 22 ஆம் திகதி காலை மீன்பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் கடந்த 22 ஆம் திகதி மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்று காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை நேற்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara