Jul 24, 2026 - 08:06 AM -
0
இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் நேற்று (23) நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக மாதேவீர் 39 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
துடுப்பாட்டத்தில் இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யவன்ஷி 50 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் சிம்பாப்வே சார்பில் முசரபானி 02 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் ங்கராவா 01 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியின் போது குறைந்த வயதில் முதல் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
இவருக்கு முன், சச்சின் டெண்டுல்கர் 16 வயது 213 நாள்களில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
