Header Logo
Mogo Academy

செய்திகள்
அசித எம்.பிக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

Jul 25, 2026 - 09:10 AM -

0

அசித எம்.பிக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Mobitel inner

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக நேற்று (24) வெளியிட்ட கூற்று பொய்யானது மற்றும் அடிப்படையற்றது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இதுவென வலியுறுத்தியுள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, அடிப்படையற்றவை மற்றும் தீய நோக்கத்தில் முன்வைக்கப்படவை எனச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கிறது. 

தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் தாக்குதல்கள் வெற்றியளிக்காது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையின் சட்டச் சமூகம் ஒற்றுமையாக இருப்பதுடன், அதன் சுயாதீனத்திற்கும் நற்பெயருக்கும் விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு வெளியிட்ட இந்த பொய்க் கூற்றை, இயலுமானால் பாராளுமன்றத்திற்கு வெளியே மீண்டும் கூறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷனவிற்குச் சவாலும் விடுத்துள்ளது.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara