Header Logo
Mogo Academy

செய்திகள்
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான வழிகாட்டலில் திருத்தம்

Jul 25, 2026 - 02:13 PM -

0

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான வழிகாட்டலில் திருத்தம்
Mobitel inner

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல் கோவையின் ஒரு பிரிவைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய, குறைந்தபட்சம் 20 வருட காலப்பகுதிக்கு உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பணியாற்றியிருக்காவிட்டால், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படக்கூடாது என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னர் இருந்த வழிகாட்டல் கோவைக்கு அமைவாக, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 20 வருட காலம் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பணியாற்றியிருக்க வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டிருந்த போதிலும், விசேட சந்தர்ப்பங்களில் ஏனைய அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ள, 15 வருட சேவைக்காலத்தைக் கொண்ட உயர்நீதிமன்ற சட்டத்தரணிகளையும் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிப்பது குறித்து பரிசீலிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கு உரிய வகையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, தகுதியுடைய நபர்கள் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara