Header Logo
Mogo Academy

செய்திகள்
கார் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்!

Jul 25, 2026 - 04:17 PM -

0

கார் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்!
Mobitel inner

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற காரும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்து காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதியூடான போக்குவரத்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார், போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

விபத்தில் கதிர்காமத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேரும், லொறியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara